தெலுங்கு சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் லைகர். முதல் முறை இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகியுள்ள லைகர் திரைப்படத்தில் குத்து சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். 

பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கும், லைகர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, மிரட்டலான முக்கிய கதாபாத்திரத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் நடித்துள்ளார். லைகர் திரைப்படத்திற்கு விஷ்ணு சர்மா ஒளிப்பதிவில், தனிஷ்க் பக்ச்சி பாடல்களுக்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் மணிஷர்மா பின்னணி இசை சேர்த்துள்ளார். 
 
நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகநாத் அவர்களின் பூரி கனெக்ட்ஸ் மற்றும் தர்மா புரோடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க,யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் வழங்கும் 
லைகர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. தமிழில் ஆர் கே சுரேஷ் அவர்களின் ஸ்டூடியோ 9 புரொடக்ஷன் நிறுவனம் லைகர் படத்தை வெளியிடுகிறது. 

லைகர் திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குனர் பூரி ஜெகன்நாத் உடன் நடிகை சார்மி கலந்துகொண்டு பேசிய புதிய ப்ரமோஷன் வீடியோவில் லைகர் படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட தடைகள் & போராட்டங்கள் குறித்து பேசிய போது மனம் நெகிழ்ந்து கண்ணீர் சிந்தினார். எமோஷனலாக பேசிய சார்மியின் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோ இதோ…
 

Producer @Charmmeofficial bursts into tears expressing the hard times during the making of #LIGER#LigerOnAug25th#WaatLagaDenge@TheDeverakonda @ananyapandayy @karanjohar #PuriJagannadh @DharmaMovies @PuriConnects pic.twitter.com/7ywXdDaioM

— Vamsi Kaka (@vamsikaka) August 19, 2022