மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் டொவினோ தாமஸ் மாரி 2 படத்தில் நடிகர் தனுஷுக்கு வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார். குறிப்பாக மலையாளத்தில் லூசிஃபர், உயரே, வைரஸ், கல்கி, ஃபாரன்சிக், கிலோமீட்டர்ஸ் கிலோமீட்டர்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த டொவினோ தாமஸ் பல மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

முன்னதாக கடந்த ஆண்டு(2021) துல்கர் சல்மானின் குருப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த டொவினோ தாமஸ் சூப்பர் ஹீரோ கதாபாத்திரமாக நடித்த மின்னல் முரளி திரைப்படம் பல மொழிகளில் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. மேலும் களை,காணேக்காணே ஆகிய படங்களும் வெளியாகின.

தொடர்ந்து இந்த ஆண்டும் (2022) வரிசையாக டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்த நாரதன் ,டியர் ஃப்ரெண்ட் மற்றும் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடித்த வாஷி உள்ளிட்ட திரைப்படங்களும் வெளிவந்து ஹிட்டடித்தது. இந்த வரிசையில் சில தினங்களுக்கு முன்பு டோவினோ நடிப்பில் மலையாளத்தில் ரிலீஸான திரைப்படம் தள்ளுமால.

இயக்குனர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் ஆக்சன் காமெடி திரைப்படமாக டொவினோ மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்து வெளிவந்த தள்ளுமால திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தள்ளுமால திரைப்படத்திலிருந்து இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசை அமைத்துள்ள ஓலெ மெலடி வீடியோ பாடல் தற்போது வெளியானது. கலக்கலான அந்த வீடியோ பாடல் இதோ…