தமிழ் திரையுலகின் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் திகழும் சீயான் விக்ரம் முன்னதாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 1 உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள நிலையில், அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரமாண்டமான திரைப்படமாக 3D தொழில் நுட்பத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

இதனிடையே டிமான்டி காலனி & இடைக்கால நொடிகள் படங்களின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அட்டகாசமான பல கெட்டப்களில் சீயான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் கோப்ரா. கேஜிஎஃப் படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மிருனாளினி ரவி, ரோஷன் மேத்யூ, மியா ஜார்ஜ்,இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் கோப்ரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கோப்ரா படத்திற்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள கோப்ரா திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட வருகிற ஆகஸ்ட் 31–ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

இந்நிலையில்  கோப்ர திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் அனைத்தும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று ஆகஸ்ட் 18-ஆம் தேதி ட்விட்டர் ஸ்பேசில் கோப்ரா படக்குழுவினர் கலந்துகொண்டு உரையாடினர். அப்போது பேசிய நடிகர் சீயான் விக்ரம் இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.