தமிழ் சினிமாவின் பிரபல இளம் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அதர்வா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தள்ளிப்போகாதே. இதனையடுத்து அதர்வா நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக ட்ரிக்கர், ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ் மற்றும் நிறங்கள் மூன்று ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியிருக்கும் குருதி ஆட்டம் திரைப்படம் நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. 8 தோட்டாக்கள் படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக குருதி ஆட்டம் தயாராகியுள்ளது.

பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், ராதாரவி, வட்சன் சக்கரவர்த்தி மற்றும் வினோத் சாகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் குருதி ஆட்டம் திரைப்படத்துக்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில், யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் குருதி ஆட்டம் படத்திலிருந்து புதிய கேரக்டர் போஸ்டர் தற்போது வெளியானது. குருதி ஆட்டம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் வட்சன் சக்கரவர்த்தியின் சேது கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் புதிய போஸ்டர் சற்று முன் வெளியானது. அந்த போஸ்டர் இதோ...
 

.@vatsanhere as ‘Sethu’ - A matchstick that burns the forest!

#KuruthiAattam from August 5th in theatres!@Atharvaamurali @sri_sriganesh89 @priya_Bshankar @FiveStarAudioIn @kbsriram16 @DoneChannel1 pic.twitter.com/vIyeu10JDH

— RockFort Entertainment (@Rockfortent) July 20, 2022