அடுத்தடுத்து பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கி இந்திய திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த மஹதீரா & நான் ஈ ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து  வெளிவந்த பாகுபலி 1&2 திரைப்படங்கள் இந்தியளவில் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த வரிதையில் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த மார்ச் 25-ம் தேதி உலகெங்கும் பல மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸான RRR திரைப்படம் பல கோடி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹாட்டானதோடு 1100 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வசூல் சாதனை படைத்தது. 

DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரித்துள்ள RRR படத்தில் ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடிக்க, அஜய் தேவ்கன் , சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

RRR படத்தில் இடம்பெற்ற அனைத்து பிரம்மாண்ட VFX காட்சிகளும் திரையரங்குகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் ஜூனியர் என்டிஆரின் ஓபனிங் காட்சியாக ரசிகர்களை கவர்ந்த புலியின் காட்சி படமாக்கப்பட்ட மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வைரலாகும் அந்த வீடியோ இதோ…
 

RRR - Bheem Capturing the Tiger - Vfx Breakdown.
Vfx done by @MPCVFX @ssrajamouli @tarak9999 @mmkeeravaani @DOPSenthilKumar @sabucyril @sreekar_prasad #KingSolmon @RRRMovie pic.twitter.com/VgOpEW4pDJ

— Srinivas Mohan (@srinivas_mohan) July 19, 2022