பல கோடி இந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை தமன்னா முன்னணி நட்சத்திர கதாநாயகியாகவும் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தமன்னா நடிப்பில் பாலிவுட்டில் போலே சுடியான் மற்றும் பிளான் ஏ பிளான் பி ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

அடுத்ததாக வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் போலா ஷங்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் தமன்னா முன்னதாக பல தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் மதுர் பண்டர்கார் இயக்கத்தில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் உருவாகும் பப்ளி பவுன்சர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பப்ளி பவுன்சர் திரைப்படத்தில் தமன்னாவுடன் இணைந்து சௌரப் சுக்லா, அபிஷேக் பஜாஜ் மற்றும் சாஹல் வைத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதுவரை உலகம் பார்த்திராத, கேட்டிராத பெண் பவுன்சர்களின் வாழ்க்கையைப் மையப்படுத்தி தயாராகும் எமோஷனல் நகைச்சுவைத் திரைப்படமாக பப்ளி பவுன்சர் திரைப்படம் தயாராகியுள்ளது.

ஃபாக்ஸ் ஸ்டார் ஹிந்தி ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்கிளி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள பப்ளி பவுன்சர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி பப்ளி பவுன்சர் திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பப்ளி பவுன்சர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. அசத்தலான அந்த போஸ்டர்கள் இதோ…
 

Oye bawale suna kya? Aa gaya hai Babli Bouncer ka time! Dilon ko yeh jodegi, ya khub haddiyaan todegi? Pata chalega jald hi! ❤️‍🔥
Here’s the first look of #BabliBouncer.
Streaming from Sept 23 only on @DisneyPlusHS
@imbhandarkar @starstudios_ #BikramDuggal @jungleepictures pic.twitter.com/cbC7nHFOKI

— Tamannaah Bhatia (@tamannaahspeaks) July 20, 2022