பீன்ஸ் விதையை விழுங்கிய மூன்று வயது குழந்தை உயிரிழப்பு!

பீன்ஸ் விதையை விழுங்கிய மூன்று வயது குழந்தை உயிரிழப்பு! - Daily news

மகாராஷ்டிரா மாநிலத்தில், பீன்ஸ் விதையை விழுங்கிய 3 வயது சிறுமி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் சுக்காலி பெல்தார் கிராமம் கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த மூன்று  வயது சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த சிறுமியின் தாய் இரவு உணவுக்காக சமைக்கப் பட்டிருந்த பீன்ஸ் விதைகளை பரிமாறிக் கொண்டு இருந்திருக்கிறார்.  

இந்நிலையில் தரையில் சமைக்கப்படாத பீன்ஸ் விதை ஒன்று கிடந்திருக்கிறது. இதைக் கண்டதும் சிறுமி அதை எடுத்து வாயில் போட்டு விழுங்கி இருக்கிறார். இதில் உடனே சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கிறது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கிறார்.  

உடனே இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார். இதுகுறித்து அறிந்ததும் போலீசார் மருத்துவமனைக்கு வந்து வழக்குப்பதிவு செய்து சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பீன்ஸ் விதையை விழுங்கியதில் சிறுமி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம்  சுக்காலி பெல்தார் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment