இயக்குனர் மிஷ்கினின் முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தெலுங்கு திரை உலகில் முன்னணி நட்சத்திர கதாநாயகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. கடைசியாக தமிழில் தளபதி விஜயின் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருந்தார்.

முன்னதாக தெலுங்கில் இந்த ஆண்டில் பிரபாஸின் ராதேஷ் யாம் மெகா ஸ்டார் சிரஞ்சீவி & ராம்சரண் இணைந்து நடித்த ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த பூஜா ஹெக்டே அடுத்ததாக ஹிந்தியில் ரன்வீர் சிங் இரட்டை வேடங்களில் நடிக்கும் சர்க்கஸ் படத்திலும் சல்மான் கானின் கிசி கா பாய் கிசி கி ஜான் படத்திலும் தற்போது கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து மகேஷ் பாபுவின் 28 வது திரைப்படமாக தயாராகும் #SSMB28 திரைப்படத்திலும் பூஜா ஹெக்டே இருக்க தான் நான் கேட்க நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு காலில் காயம் ஏற்பட்டு தசை நார் கிழிந்ததால் மிகுந்த அவதிப்பட்டு வந்த நடிகை பூஜா ஹெக்டே அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

தற்போது சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு மீண்டும் பழையபடி நடக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் காலில் கட்டோடு நடைப்பயிற்சி செய்யும் வீடியோவை தனது Instagram பக்கத்தில் வெளியிட்டு “வாழ்க்கையில் இரண்டாவது முறையாக நடை பழகுகிறேன்” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் பூஜா ஹெக்டே. அந்த வீடியோ இதோ…
 

காலில் ஏற்பட்ட காயம்... சிகிச்சை வீடியோவை பகிர்ந்த #PoojaHegde !

Wishyou a speedy recovery @hegdepooja 💪💐#PoojaHegde #LegInjury pic.twitter.com/9eYZTJ9FCZ

— Galatta Media (@galattadotcom) November 24, 2022