Fan boy சம்பவத்திற்கு ரெடியா? உலகநாயகன் கமல் ஹாசன் ரசிகர்களுக்கு அட்டகாசமான ட்ரீட்.. – வைரலாகும் அறிவிப்பு இதோ...

ரீ ரிலீஸாகும் வேட்டையாடு விளையாடு விவரம் இதோ - Kamal haasan Vettaiyaadu vilaiyaadu re release on this date | Galatta

இந்திய சினிமாவின் ஆக சிறந்த கலைஞராக இருந்து வருபவர் உலகநாயகன் கமல் ஹாசன். பல தாசப்தங்களை கடந்து இந்திய திரையுலகில் கவனம் மிக்க கலைஞராக இருந்து வருகிறார். கலை துறைக்காக வித்யாசமான கதைகளை நுணுக்கமாக நடித்து ரசிகர்களை கவர்ந்த உலகநாயகன் கமல் ஹாசன் கடந்த ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  விக்ரம் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய ஹிட் தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார். தற்போது கமல் ஹாசன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் அதை தொடர்ந்து இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் ஒருபடத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதை முடித்து இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் மீண்டும் கூட்டணி அமைகவுள்ளார் உலகநாயகன் கமல் ஹாசன். நடிப்பு மட்டுமல்லாமல் திரைத்துறையில் நடிகர் சிவாகார்த்திகேயன், நடிகர் சிலம்பரசன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் படங்களை தயாரிக்கவுள்ளார்.

நாயகன் மீண்டு வரார் என்று உலகநாயகன் கமல் ஹாசன் உற்சாகத்தில் ஆர்பரித்து கொண்டிருக்கும் தருணத்தில் உலகநாயகன் கமல் ஹாசனின் திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்த ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்தினை ரீ ரிலீஸ் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2006 இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வித்யாசமான கிரைம் திரில்லர் திரைப்படமாக வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவு வரவேற்பை அளித்தனர். தமிழ் சினிமாவில் புது விதமான கிரைம் கதைக்களத்தில் உருவான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தை ரசிகர்கள் இன்று வரை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் ரீ ரிலீஸ் வரும் ஜூன் மாதம் செய்யவுள்ளதாக வெளியான அறிவிப்பு ரசிகர்களை உற்சாகமடைய செய்து இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே கமல் ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்யவுள்ளதாக தயாரிப்பாளர் எஸ் தானு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

supreme court stays ban on the kerala story movie west bengal and tamilnadu

செவன்ந்த் சேனல் கம்யூனிகேஷன் தயாரிப்பில் உருவான இப்படத்தில் கமல் ஹாசானுடன் இணைந்து இப்படத்தில் ஜோதிகா, கமாலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்திருப்பார்.

‘பொன்னியின் செல்வன் 2’  - வை தொடர்ந்து பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஜெயம் ரவி..  – இணையத்தில் வைரலாகும் அப்டேட் இதோ..
சினிமா

‘பொன்னியின் செல்வன் 2’ - வை தொடர்ந்து பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஜெயம் ரவி.. – இணையத்தில் வைரலாகும் அப்டேட் இதோ..

காஜல் அகர்வால் ரெஜினா கெஸன்ட்ரா கலையரசன் யோகி பாபுவின் மிரட்டலான ஹாரர் படம்... கவனத்தை ஈர்க்கும் புதிய GLIMPSE இதோ!
சினிமா

காஜல் அகர்வால் ரெஜினா கெஸன்ட்ரா கலையரசன் யோகி பாபுவின் மிரட்டலான ஹாரர் படம்... கவனத்தை ஈர்க்கும் புதிய GLIMPSE இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள்... யார் யார் தெரியுமா? வைரலாகும் அசத்தலான புகைப்படங்கள் இதோ!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள்... யார் யார் தெரியுமா? வைரலாகும் அசத்தலான புகைப்படங்கள் இதோ!