ஆக்ஷனில் மாஸ் காட்டும் மக்கள் செல்வன்.. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படக்குழு வெளியிட்ட அதிரடி Glimpse.. – வைரல் வீடியோ இதோ..

யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் சிறப்பு காட்சியை வெளியிட்ட படக்குழு வைரல் வீடியோ இதோ - Sneak peek from Yaadhum oore yaavarum kelir | Galatta

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் பல மொழி துறைகளில் பிஸியாக இயங்கி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இயக்குனர்  வெங்கட கிருஷ்ணா ரோகநாத் அவர்களின் இயக்கத்தில் உருவான இப்படம் நீண்ட காலமாக ரிலீஸுக்கு காத்திருந்து தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து மேகா ஆகாஷ் கதாநாயாகியாக நடிக்க மேலும்   ‘விடாமுயற்சி’ இயக்குனர் மகிழ் திருமேனி, இயக்குனர் மோகன் ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், ரகு ஆதித்யா, இமான் அண்ணாச்சி, ரித்விகா, கரு.பழனியப்பன், மதுரா, கனிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்ய ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக இப்படத்தினை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் படக்குழுவினர் இப்படத்தில் அமைந்துள்ள முக்கிய சண்டை காட்சியினை தற்போது வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது

 

#Muruga video song is out ▶️ https://t.co/JJMtMLZmfC#YaadhumOoreYaavarumKelir in theatres now.#YOYKfromToday@ChandaraaArts @EssakiduraiS @roghanth @akash_megha @SakthiFilmFctry @sakthivelan_b @raguesaki @Riythvika @jayam_mohanraja @nivaskprasanna @Vetri_DOP @AbrahamEditorpic.twitter.com/tTncZkeEtQ

— VijaySethupathi (@VijaySethuOffl) May 19, 2023

தற்போது விஜய் சேதுபதி காக்கா முட்டை, கடைசி விவசாயி இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் இணைய தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். தொடந்து வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படத்திலும் பிரபல பாலிவுட் இயக்குனர் ஸ்ரீ ராம் ராகவன் இயக்கத்தில் மெரி கிறிஸ்மஸ் என்ற ஹிந்தி படத்திலும் அதை தொடர்ந்து மௌன படமாக உருவாகி வரும் ‘காந்தி டாக்ஸ்’ மற்றும் மாநகரம் இந்தி ரீமேக்கிலும் அட்லி ஷாருக் கான் கூட்டணியில் உருவாகும் ‘ஜவான்’ படத்திலும் என்று பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

சமுத்திரக்கனி, பவன் கல்யாண் கூட்டணியில் ரீமேக்காகும் ‘வினோதய சித்தம்’.. – அட்டகாசமான டைட்டிலுடன் வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

சமுத்திரக்கனி, பவன் கல்யாண் கூட்டணியில் ரீமேக்காகும் ‘வினோதய சித்தம்’.. – அட்டகாசமான டைட்டிலுடன் வைரலாகும் Glimpse இதோ..

வேகமெடுக்கும் ‘புஷ்பா 2’ படப்பிடிப்பு.. அப்டேட் கொடுத்த படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள்  - வைரலாகும் பதிவு  இதோ..
சினிமா

வேகமெடுக்கும் ‘புஷ்பா 2’ படப்பிடிப்பு.. அப்டேட் கொடுத்த படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வைரலாகும் பதிவு இதோ..

ஜெய்பூரில் பிரம்மாண்ட திருமணம்.. காதலியை கரம் பிடிக்கும் நடிகர் சர்வானந்த் – குவியும் வாழ்த்துகள்.. விவரம் இதோ..
சினிமா

ஜெய்பூரில் பிரம்மாண்ட திருமணம்.. காதலியை கரம் பிடிக்கும் நடிகர் சர்வானந்த் – குவியும் வாழ்த்துகள்.. விவரம் இதோ..