ரெட் ஜெயன்ட் மூவிஸ் - டாடா தயாரிப்பாளரின் அடுத்த படைப்பு... அருள்நிதியின் மிரட்டலான அவதாரத்தில் கழுவேத்தி மூர்க்கன்! அதிரடி ட்ரெய்லர் இதோ

அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் பட ட்ரைலர் வெளியீடு,arulnithi in kazhuvethi moorkkan movie trailer out now | Galatta

பிக் பாஸ் போட்டியாளரும் நடிகருமான கவின் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்ற டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒலிம்பியா மூவிஸ் மற்றும் டாடா படத்தை வெளியிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் கழுவேத்தி மூர்க்கன். நடிகர் அருள்நதியின் பக்கா மாஸ் ஆக்சன் படமாக தயாராகி இருக்கும் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. வழக்கமாக தனது பாணியில் வித்தியாசமான திரில்லர் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகர் அருள்நிதி நடிப்பில் கிராமத்து பின்னணியில் நடக்கும் கதைக்களமாக தயாராகி இருக்கும் இந்த கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தில் இதுவரை தான் நடித்த கதாபாத்திரங்களிலேயே முற்றிலும் மாறுபட்ட மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிகர் அருள்நிதி நடித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தை அறிவிக்கும் வகையில் வெளிவந்த அருள்நிதியின் அதிரடியான மாஸ் லுக்கின் புகைப்படங்கள் வெளியானதிலிருந்தே இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை அருள்நிதியின் திரைப்படங்கள் என்றாலே சுவாரஸ்யமான திரில்லர் திரைப்படங்கள் தான். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல யூட்யூபர் எரும சாணி விஜய் இயக்குனராக அறிமுகமாகிய டி-ப்ளாக், இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த தேஜாவு மற்றும் இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்த டைரி என அருள்நிதி நடித்த மூன்று திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டிலும் சைக்கலாஜிக்கல் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக அருள்நிதி மற்றும் பாரதிராஜா இணைந்து நடித்த திருவின் குரல் திரைப்படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியிடாக ரிலீஸாகி ரசிகர்களை கவனிக்க வைத்தது. இந்த வரிசையில் தன் திரை பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்த டிமான்டி காலனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அஜய் ஞானமுத்து உடன் இணைந்துள்ள நடிகர் அருள்நிதி டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார். 

இதனிடையே ஜோதிகாவின் ராட்சசி படத்தை இயக்கிய இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் மிரட்டலான கதாப்பாத்திரத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் கழுவேத்தி மூர்க்கன். சார்பட்டா பரம்பரை & நட்சத்திரம் நகர்கிறது படங்களின் நாயகி துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ள கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த், ராஜசிம்மன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பரியேறும் பெருமாள் படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவில், நாகூரான் படத்தொகுப்பு செய்துள்ள கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்திற்கு D.இமான் இசையமைக்க, பாடல்களை கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார். டாடா திரைப்படத்தின் தயாரிப்பாளர் S.அம்பேத்குமார் தனது ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிக்கும் அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற மே 26 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. அதிரடியான அந்த ட்ரெய்லர் இதோ…
 

சூப்பர் டீலக்ஸ் இயக்குனரின் மாடர்ன் லவ் சென்னை வெப் சீரிஸ்... ஜீவி பிரகாஷ் கொடுத்த ஸ்பெஷல் GLIMPSE இதோ!
சினிமா

சூப்பர் டீலக்ஸ் இயக்குனரின் மாடர்ன் லவ் சென்னை வெப் சீரிஸ்... ஜீவி பிரகாஷ் கொடுத்த ஸ்பெஷல் GLIMPSE இதோ!

சினிமா

"ராஷ்மிகாவின் கடின உழைப்பை ஒருபோதும் குறை கூறவில்லை!"- சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட அறிக்கை இதோ!

ரசிகர்களுக்கு விஜய் ஆண்டனி கொடுத்த புது சர்ப்ரைஸ்... பிச்சைக்காரன் 2 பட ரொமான்டிக்கான ட்ரீட் இதோ!
சினிமா

ரசிகர்களுக்கு விஜய் ஆண்டனி கொடுத்த புது சர்ப்ரைஸ்... பிச்சைக்காரன் 2 பட ரொமான்டிக்கான ட்ரீட் இதோ!