காஜல் அகர்வால் ரெஜினா கெஸன்ட்ரா கலையரசன் யோகி பாபுவின் மிரட்டலான ஹாரர் படம்... கவனத்தை ஈர்க்கும் புதிய GLIMPSE இதோ!

காஜல் அகர்வாலின் கருங்காப்பியம் பட புது ஸ்னிக் பீக் வெளியிடு,Kajal aggarwal in karungaappiyam movie new sneak peek video out now | Galatta

நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் ஹாரர் த்ரில்லர் படமாக தயாராகி இருக்கும் கருங்காப்பியம் திரைப்படத்திலிருந்து ஒரு புதிய சர்ப்ரைசை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கோஸ்டி. நடிகை காஜல் அகர்வால் மற்றும் யோகி பாபு இருவரும் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள கோஸ்டி திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு அழகிய ஆண் குழந்தைக்கு தாயாகிய நடிகை காஜல் அகர்வால், தற்போது மீண்டும் தனது திரைப்பயணத்தின் இரண்டாம் இன்னிங்சை தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

அதில் முதலாவதாக ஹிந்தியில் தயாராகி இருக்கும் உமா திரைப்படத்தில் காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விரைவில் இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அடுத்ததாக தெலுங்கு திரையுலங்கின் நட்சத்திர நடிகரான நந்தாமுரி பாலகிருஷ்ணா தனது திரைப் பயணத்தில் 108 வது திரைப்படமாக நடிக்கும் NBK108 படத்திலும் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் காஜல் அகர்வால் நடிப்பில் கோஸ்டி படத்தைத் தொடர்ந்து அடுத்த ஹாரர் திரில்லர் படமாக தயாராகி இருக்கும் திரைப்படம் தான் கருங்காப்பியம். இயக்குனர் டி கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த கருங்காப்பியம் திரைப்படத்தில் காஜல் அகர்வாலுடன் இணைந்து ரெஜினா கெஸ்ஸண்ட்ரா கலையரசன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஜனனி ஐயர் ஆதவ் கண்ணதாசன்  யோகி பாபு அதிதி ரவீந்திரநாத் டி எஸ் கே ஷெரின் சேத் நோய்ரிக்கா VJ பார்வதி மற்றும் லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

PAVE என்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஐ கிரியேஷன்ஸ், உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் ப்ரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் கருங்காப்பியம் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவில் படத்தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்ய பிரசாத்SN இசை அமைத்துள்ளார். மிரட்டலான ஹாரர் திரில்லர் திரைப்படமாக தயாராகி இருக்கும் கருங்காப்பியம் திரைப்படத்தின் ரிலீஸ் காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் வருமே 19ஆம் தேதி கருங்காப்பியம் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது இந்நிலையில் கருங்காப்பியம் திரைப்படத்திலிருந்து மிரட்டாலான SNEAK PEEK வீடியோவை சர்ப்ரைஸாக படக் குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ள கருங்காப்பியம் படத்தின் SNEAK PEEK அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

பொன்னியின் செல்வன் 2 கிளைமாக்ஸ் மீதான விமர்சனங்களுக்கு சரியான விளக்கமளித்த தயாரிப்பாளர் சிவா ஆனந்த்! வைரல் வீடியோ இதோ
சினிமா

பொன்னியின் செல்வன் 2 கிளைமாக்ஸ் மீதான விமர்சனங்களுக்கு சரியான விளக்கமளித்த தயாரிப்பாளர் சிவா ஆனந்த்! வைரல் வீடியோ இதோ

விஷால்-SJசூர்யாவின் பக்கா மாஸ் மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் கொண்டாட்டம்... காரணம் என்ன?- ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் GLIMPSE இதோ
சினிமா

விஷால்-SJசூர்யாவின் பக்கா மாஸ் மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் கொண்டாட்டம்... காரணம் என்ன?- ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் GLIMPSE இதோ

சினிமா

"பிரபல நடிகையை கரம் பிடித்த நாடாளுமன்ற MP!"- கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் இதோ!