ஜல்லிக்கட்டு தீர்ப்பிற்கு ஆதரவு தந்த 'வாடிவாசல்' நாயகன் சூர்யா.. - இணையத்தில் வைரலாகும் பதிவு.. விவரம் இதோ..

ஜல்லிக்கட்டு குறித்து நடிகர் சூர்யா வைரல் பதிவு இதோ - Actor Suriya about Jallikattu supreme court verdict | Galatta

தமிழ் மக்களின் கலாச்சாரமான ஏழு தழுவுதல் அதாவது ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்வுக்கு தடை விதிக்க கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு வழக்கு நேற்று விசாரணைக்கு உச்சநீதி சாசன அமர்வில் வந்தது. அதில் தமிழ்நாடு கலாசார விளையாட்டு ஜல்லிக்கட்டு மற்றும் கர்நாடக மாநில விளையாட்டான காம்பாலா விளையாட்டில் கால்நடைகளை துன்புறுத்துவதால் நிகழ்வை தடுக்க சொல்லி வந்த மேல்முறையீட்டு வழக்கில் நேற்று தமிழ் நாடு அரசிற்கு ஆதரவாக வழக்கு முடிந்து ஜல்லிக்கட்டு , காம்பாலா விளையாட்டு போட்டிகள் நடைபெற எந்தவித தடையும் இல்லை என்று தீர்ப்பு வந்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பினை மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் வரவேற்பினை வழங்கி வருகின்றனர். அதே நேரத்தில் திரையுலக பிரபலங்களும் தங்கள் வரவேற்பை அளித்து வருகின்றனர்.

அதன்படி திரையுலக ஜாம்பவானும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான உலகநாயகன் கமல் ஹாசன் இந்த தீர்ப்பு குறித்து,

“தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதலை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஏற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு, தமிழரின் கலாச்சாரத்துக்குக் கிடைத்த சட்டப்பூர்வ அங்கீகாரம். இயற்கையோடும், விலங்குகளோடும் இணைந்து வாழும் தமிழக மக்களால் ஒருபோதும் கால்நடைகளுக்குத் துன்பம் ஏற்படாது என்பதை நாட்டின் தலைமை நீதிமன்றமே ஒப்புக்கொண்டதுடன், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தமிழ்நாட்டுக் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்தது என்றும் அங்கீகரித்துள்ளது பெருமைக்குரியது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக புரட்சிப் போராட்டம் நடத்திய இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும், உரிய ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, திறமையாக வாதாடி, சட்டப்போராட்டம் நடத்திய தமிழக அரசுக்கும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒட்டுமொத்த தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றி!” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

மேலும் இசையமைப்பாளரும் நடிகரும் ஜி வி பிரகாஷ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தல் 6 ஆண்டுகளுக்கு முன் நம்மவர்களின் அகிம்சை வழி வீர தீர சூரத்தை சாட்சியாய் கண்டேன். போராட்டத்தில் நானும் ஒரு துளியாய் நின்றேன்.அரசின் ஆணையை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பில் மெய்சிலிர்த்து போனேன். தமிழர் ஒற்றுமை வென்றது” என பதிவிட்டுள்ளார்.

6 ஆண்டுகளுக்கு முன் நம்மவர்களின் அகிம்சை வழி வீர தீர சூரத்தை சாட்சியாய் கண்டேன் , போராட்டத்தில் நானும் ஒரு துளியாய் நின்றேன்.
அரசின் ஆணையை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பில் மெய்சிலிர்த்து போனேன்.
தமிழர் ஒற்றுமை வென்றது 🔥🔥 - #Jallikattu #JallikattuJudgement

— G.V.Prakash Kumar (@gvprakash) May 18, 2023

இதை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா அவர்கள் இந்த தீர்ப்பிற்கு ஆதரவு அளித்து பதிவிட்டதில்,

“நமது தமிழ் கலாச்சாரத்திற்கும் கன்னடத்தின் கம்பாள கலாச்சாரத்திற்கும் ஒருங்கிணைந்த ஜல்லிக்கட்டு நிகழ்வு குறித்து மதிப்பிற்குரிய  உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சியும் பெருமையையும் அடைகின்றேன்.. இரு மாநில அரசிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தொடர்ந்து போராடிய அனைவர்க்கும் எனது மரியாதை கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதையடுத்து சூர்யாவின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Happy and proud to note the Hon’ble Supreme Court’s ruling, upholding #Jallikattu that’s integral to our Tamil culture & #Kambala to Kannada culture!
Hearty congratulations to both State Governments and respect to all those who fought consistently against the ban.…

— Suriya Sivakumar (@Suriya_offl) May 19, 2023

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா கூட்டணியில் பிரம்மாண்ட படைப்பாக வரும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார்.  அப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் ஜல்லிக்கட்டு கதைகளத்தை சார்ந்த ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“மாமன்னன் அண்ணனுடைய கடைசி படமா?..” உண்மையை உடைத்த அருள்நிதி.. - சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

“மாமன்னன் அண்ணனுடைய கடைசி படமா?..” உண்மையை உடைத்த அருள்நிதி.. - சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

சமுத்திரக்கனி, பவன் கல்யாண் கூட்டணியில் ரீமேக்காகும் ‘வினோதய சித்தம்’.. – அட்டகாசமான டைட்டிலுடன் வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

சமுத்திரக்கனி, பவன் கல்யாண் கூட்டணியில் ரீமேக்காகும் ‘வினோதய சித்தம்’.. – அட்டகாசமான டைட்டிலுடன் வைரலாகும் Glimpse இதோ..

வேகமெடுக்கும் ‘புஷ்பா 2’ படப்பிடிப்பு.. அப்டேட் கொடுத்த படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள்  - வைரலாகும் பதிவு  இதோ..
சினிமா

வேகமெடுக்கும் ‘புஷ்பா 2’ படப்பிடிப்பு.. அப்டேட் கொடுத்த படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வைரலாகும் பதிவு இதோ..