‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை தமிழகத்தில் தடை செய்ய கூடாது.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.. – விவரம் உள்ளே..

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் விவரம் உள்ளே - Supreme Court stays ban on the Kerala story movie | Galatta

இந்து மத பெண்களை ஏமாற்றி இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி தீவிரவாதிகளாக மாற்றுவதாக கதையின் சாரத்தில் உருவாகி கடந்த மே மாதம் நாடு முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இஸ்லாமிய மதத்தினரை உண்மைக்கு புறம்பாக இழிவு செய்யப்பட்டு படம் உருவாக்கி வைத்து உள்ளனர் என்று ஒரு தரப்பினர் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்ய ஆர்பாட்டம் நடைபெற்றது. தடைகளை தாண்டி கடந்த மே மாதம் 5 ம் தேதி திரைப்படம் வெளியானது. தென்னிந்திய பகுதிகளில் தமிழ் நாடு, கேரளா போன்ற பகுதிகளில் இப்படத்திற்கு எதிர்ப்புகள் தொடர்ந்தது மேலும் மேற்கு வாங்க மாநிலத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

அதே நேரத்தில் சமூக கருத்துகளை உணர்வு பூர்வமாக இப்படம் பேசுகிறது என்று பிரதமர் மோடி உட்பட  சில அரசியல் ஆளுமைகளும் இப்படத்தை வரவேற்றனர். ஒரு படி மேல் சென்று இப்படத்திற்கு உத்திர பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. தமிழ் நாடு, மேற்கு வங்க மாநிலங்களில்  தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதித்ததை எதிர்த்து பட தயாரிப்பாளர் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து தடை செய்ததன் தொடர்பாக பதிலளிக்க மேற்கு வங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி திரையிடப்பட்டதால் திரையரங்குகள் தாக்கப்பட்டதற்கு தொடர்பாக தமிழ் நாடு அரசு பிரமாண பத்திரம் பதிவு செய்ய உத்தவிடப்பட்டது.  

இந்த வழக்கில் தமிழ் நாடு சார்பில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழ் நாடு மக்களிடம் வரவேற்பு இல்லை. அதனால் திரையரங்க உரிமையாளர்களே இப்படத்தை தூக்கி விட்டு வேறு படத்தை திரையிட்டனர். இந்த சம்பவத்தில் தமிழ் நாடு அரசின் தலையீடு இல்லை என்று குறிப்பிட்டு தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் மேற்கு வங்க மாநிலம் சார்பில் அளிக்கப்பட பதில்கள் நீதிமன்றத்திற்கு ஏற்புடையதாக இல்லை. எனவே தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட்டது. தமிழகத்தை பொறுத்தவரை ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்ய கூடாது என்று உத்தரவினை பிறப்பித்தனர். இந்த வழக்கு தொடர்பாக வெளியான தீர்பை தி கேரளா ஸ்டோரி படத்தின் ரசிகர்களை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தாலும் வட இந்திய பகுதிகள் மற்றும் உலகநாடுகளில் இப்படம் வெற்றிகரமாக ஓடி தற்போது 200 கோடி வசூலை நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

காஜல் அகர்வால் ரெஜினா கெஸன்ட்ரா கலையரசன் யோகி பாபுவின் மிரட்டலான ஹாரர் படம்... கவனத்தை ஈர்க்கும் புதிய GLIMPSE இதோ!
சினிமா

காஜல் அகர்வால் ரெஜினா கெஸன்ட்ரா கலையரசன் யோகி பாபுவின் மிரட்டலான ஹாரர் படம்... கவனத்தை ஈர்க்கும் புதிய GLIMPSE இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள்... யார் யார் தெரியுமா? வைரலாகும் அசத்தலான புகைப்படங்கள் இதோ!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள்... யார் யார் தெரியுமா? வைரலாகும் அசத்தலான புகைப்படங்கள் இதோ!

பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து லைகாவின் அடுத்த படைப்பு... கவனம் ஈர்க்கும் ஜெய்யின் புதிய பட அசத்தலான வீடியோ பாடல் இதோ!
சினிமா

பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து லைகாவின் அடுத்த படைப்பு... கவனம் ஈர்க்கும் ஜெய்யின் புதிய பட அசத்தலான வீடியோ பாடல் இதோ!