வெற்றிமாறனின் மெகா பிளாக்பஸ்டர் விடுதலை பாகம் 1 படைத்த தரமான சாதனை... தயாரிப்பாளரின் முக்கிய பதிவு இதோ!

வெற்றிமாறனின் விடுதலை படம் 50 நாட்களை கடந்துள்ளது,vetrimaaran in viduthalai part 1 successfully crossed 50 days in theatres | Galatta

படம் பார்த்த ஒவ்வொரு ரசிகர்களின் இதயங்களிலும் அழுத்தமாக முத்திரை பதித்து இதுவரை பார்த்த தமிழ் திரைப்படங்களிலேயே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய திரைப்படமாக ரசிகர்களால் கவனிக்கப்பட்ட இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் விடுதலை பாகம் 1 திரைப்படம் தற்போது வர்த்தக ரீதியிலும் முக்கிய சாதனை படைத்துள்ளது. இதுவரை இந்திய சினிமாவில் கண்டிராத புதிய அனுபவத்தை கொடுக்கும் சிறந்த படைப்பாக விடுதலை திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பாக உருவாக்கி அதன் அத்தனை சாராம்சங்களும் மிகச் சரியாக சேரும் அளவில் வழங்கி இருக்கிறார். தொடர்ந்து அழுத்தமான கதைக்களம் இருக்கும் திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர் வெற்றிமாறனின் திரை பயணத்தில் மிகச்சிறந்த திரைப்படமாக விடுதலை இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என சொல்லும் அளவிற்கு காட்சிக்கு காட்சி அசாத்தியமான காட்சி அமைப்புகளும் நிஜத்திற்கு மிக நெருக்கமான எதார்த்தமான கதாபாத்திரங்களும் மக்களை புதுவிதமாக உணர வைத்திருக்கின்றன. 

கதாநாயகனாக தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த உழைப்பையும் கொட்டி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் தன்வசமாக்கி இருக்கிறார் சூரி. இத்தனை நாட்களாக இவரை எப்படி ஒரு பரிமாணத்தில் பார்க்க தவறி விட்டோமே என தமிழ் சினிமா யோசிக்கும் அளவிற்கு நடிகர் சூரி, காவலர் குமரேசன் வேடத்தில் கணக்கச்சிதமாக நடித்திருந்தார். பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ள சூரியனுடன் இணைந்து, பெருமாள் வாத்தியார் எனும் முன்னணி கதாப்பாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். தான் நடித்த காட்சிகள் மிகக் குறைவு என்றாலும் விடுதலை பாகம் 2 படத்திற்கான எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் அனல் பறக்கும் வசனங்களோடு மிரட்டலாக விஜய் சேதுபதி நடித்த காட்சிகள் திரையரங்குகளை கைத்தட்டல்களாலும் ரசிகர்களின் ஆரலாரத்தாலும் அதிர வைத்தனர்.

மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளனர். R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், R.ராமர் படத்தொகுப்பு செய்ய, பீட்டர் ஹெய்ன் மற்றும் ஸ்டண் சிவா ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ள விடுதலை திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.  ஆர் எஸ் இன்ஃபோடைன்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அவர்கள் தயாரிக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட விடுதலை பாகம் 1 திரைப்படம் கடந்த மார்ச் 31ம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி பெரும் வெற்றி பெற்றது. ரிலீசுக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் "ஸ்பெஷல் கட்"-ல் கூடுதல் காட்சிகள் கொண்ட விடுதலை பாகம் 1 ஸ்பெஷல் வெர்ஷன் ஜீ5 தளத்தில் வெளிவந்து OTT ஒளிபரப்பிலும் சாதனை படைத்தது. இந்நிலையில் தற்போது விடுதலை பாகம் 1 திரைப்படம் வெற்றிகரமாக திரையங்குகளில் 50 நாட்களைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அவர்களின் அந்த பதிவு இதோ…
 

#ViduthalaiPart1 50th day a spl mention to all the souls who had work hard to make this project a successful one, Thank you one and all #VetriMaaran @VijaySethuOffl @sooriofficial @ilaiyaraaja @rsinfotainment @BhavaniSre @mani_rsinfo @RedGiantMovies_ @SonyMusicSouth pic.twitter.com/88jyk9LcmC

— Red (@elredkumar) May 19, 2023

தமிழ் SUPER HERO-வாக கலக்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதி... ரசிகர்கள் எதிர்பார்த்த வீரன் பட ட்ரெய்லர் எப்போது? மாஸான அறிவிப்பு இதோ!
சினிமா

தமிழ் SUPER HERO-வாக கலக்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதி... ரசிகர்கள் எதிர்பார்த்த வீரன் பட ட்ரெய்லர் எப்போது? மாஸான அறிவிப்பு இதோ!

சூப்பர் டீலக்ஸ் இயக்குனரின் மாடர்ன் லவ் சென்னை வெப் சீரிஸ்... ஜீவி பிரகாஷ் கொடுத்த ஸ்பெஷல் GLIMPSE இதோ!
சினிமா

சூப்பர் டீலக்ஸ் இயக்குனரின் மாடர்ன் லவ் சென்னை வெப் சீரிஸ்... ஜீவி பிரகாஷ் கொடுத்த ஸ்பெஷல் GLIMPSE இதோ!

சினிமா

"ராஷ்மிகாவின் கடின உழைப்பை ஒருபோதும் குறை கூறவில்லை!"- சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட அறிக்கை இதோ!