சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள்... யார் யார் தெரியுமா? வைரலாகும் அசத்தலான புகைப்படங்கள் இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த வருண் சக்கரவர்த்தி வெங்கடேஷ் ஐயர்,varun chakravarthy and venkatesh iyer met superstar rajinikanth | Galatta

இந்திய சினிமா வியக்கும் உச்ச நட்சத்திரமாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களும் ஐபிஎல்-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களுமான வருண் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் நேரில் சந்தித்துள்ளனர். முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் அவர்களை நேரில் சந்தித்தார். குழந்தை பருவத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகராக தான் இருப்பதாக தெரிவித்த சஞ்சு சாம்சன் சூப்பர் ஸ்டார் அவர்களோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய வீரர்களான தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

70 வயதை கடந்த பிறகும் இன்னும் குறையாத வேகத்தோடு தொடர்ந்து அடுத்தடுத்து அதிரடியான படங்களில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் மொய்தின் பாய் எனும் மிக முக்கிய கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தனது திரைப் பயணத்தில் 170 ஆவது திரைப்படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்170 திரைப்படத்தை லைகா ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் அவர்கள் இயக்க உள்ளார். இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் ஸ்டைலில் அவருக்கே உரித்தான டார்க் காமெடி திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு இணைந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சூப்பர் ஸ்டார்களாக திகழும் மோகன்லால், சுனில், சிவராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெரஃப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன், தரமணி& ராக்கி பட நடிகர் வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இளம் வீரர் ரிங்கு சிங்கின் திறமையான பேட்டிங்கை பாராட்டும் விதமாக அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார். இந்நிலையில் அதே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சார்ந்த வருண் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து வரும் சக்கரவர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் "நீங்கள் வானத்தில் தினமும் எத்தனை லட்சம் நட்சத்திரங்களை வேண்டுமானாலும் பார்க்கலாம்... ஆனால் இந்த சூப்பர் நட்சத்திரத்தை(சூப்பர் ஸ்டார்) பார்ப்பது வாழ்க்கையில் ஒரு முறையாவது நடந்து விட வேண்டும். ஆமாம் இது நடந்தது… தி ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு... அவர் எங்களோடு பேசும்போது குடும்பத்தில் ஒருவராகவே எங்களை உணர வைத்தார். லவ் யூ தலைவா!” என பதிவிட்டு அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ…
 

You can see a million stars in the night sky daily. But seeing this Super Star is a once in a lifetime occurrence.Yes!!! It happened !!!
With " THE ONE & ONLY SUPER STAR @rajinikanth " !!!
Seriously felt like a family member the way he spoke to us. Love you Thalaivaa.❤️❤️❤️ pic.twitter.com/utcFiE9g7l

— Varun Chakaravarthy (@chakaravarthy29) May 16, 2023

விஷால்-SJசூர்யாவின் பக்கா மாஸ் மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் கொண்டாட்டம்... காரணம் என்ன?- ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் GLIMPSE இதோ
சினிமா

விஷால்-SJசூர்யாவின் பக்கா மாஸ் மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் கொண்டாட்டம்... காரணம் என்ன?- ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் GLIMPSE இதோ

சினிமா

"பிரபல நடிகையை கரம் பிடித்த நாடாளுமன்ற MP!"- கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் இதோ!

'வேகமெடுக்கும் சுந்தர்Cயின் அரண்மனை 4!'- தமன்னா கொடுத்த மாஸ் அப்டேட்... வைரலாகும் புது SHOOTING SPOT GLIMPSE இதோ!
சினிமா

'வேகமெடுக்கும் சுந்தர்Cயின் அரண்மனை 4!'- தமன்னா கொடுத்த மாஸ் அப்டேட்... வைரலாகும் புது SHOOTING SPOT GLIMPSE இதோ!