பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் சண்டை சச்சரவு என இருந்த நிலையில் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. இன்றைய முதல் ப்ரோமோவில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அன்போடு மகிழ்ச்சியாக இருப்பதை காண முடிகிறது. ஆடல், பாடல், கொண்டாட்டம், கேக், பரிசுகள், உணவு என இன்று போட்டியாளர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். அதனால் இன்றைய பிக் பாஸ் வழக்கம்போல சண்டை, வாக்குவாதம் என போகாமலே கொண்டாட்டத்திற்கான மூடிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கவேண்டிய பிக் பாஸ் இந்த வருடம் கொரோனா காரணமாக அக்டோபர் மாதத்தில் தான் தொடங்கியது. அதனால் இந்த வருடம் பிக் பாஸ் வீட்டில் தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகளை விமரிசையாக கொண்டாடும் வாய்ப்பு போட்டியாளர்களுக்கு கிடைத்திருக்கிறது.

மேலும் இந்த சீசனில் போட்டியாளர்களுக்கு நியூ இயர் மற்றும் பொங்கலையும் கொண்டாடும் வாய்ப்பும் கிடைக்கவுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நடந்த பால் பிடிக்கும் டாஸ்க்கில், நான்காம் பகுதி சற்று வித்தியாசமாக கோல்டு நிற பந்துகள் உடன் நடைபெற்றது. அதில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு தங்க நிற பந்தை பிடிக்க வாய்ப்பு கொடுக்கப்படும். நேற்று நடந்த ரேங்கிங் டாஸ்கில் முதல் மூன்று இடங்களை பிடித்த ரியோ, ரம்யா மற்றும் சோமிற்கு முறையே 3,2,1 பந்துகள் அதிகம் வழங்கப்பட்டது.

அந்த தங்க நிற பந்தை பிடித்துவிட்டால் அங்கு வைக்கப்பட்டு இருக்கும் போர்டில் அவர்களுக்கு பிடித்த சக்தியை எடுத்து அதன்படி மதிப்பெண்களை மாற்றியமைக்கலாம். முதலில் ரம்யா ரியோவின் மதிப்பெண்களை பூஜ்யம் ஆக்கினார். அதன் பின் மதிப்பெண்களை freeze செய்வது, இரட்டிப்பாக்குவது, இரண்டு பேர் மதிப்பெண்களை ஒருவர் எடுத்துக்கொள்வது என சுவார்ஸயமாக போட்டி மாறியது.

இப்படி கடைசி சுற்றில் அனைவரின் மதிப்பெண்களும் அதிகம் மாற்றி மாற்றி அமைக்கப்பட்ட நிலையில் இறுதியில் ரியோவுக்கு தான் அதிக மதிப்பெண்கள் கிடைத்தது. அவருக்கு அதிகபட்சமாக 334 புள்ளிகள் கிடைத்தது. அவர் முதலிடம் பிடித்ததால் அவர் அடுத்த வார தலைவர் டாஸ்க்கிற்கு நேரடியாக செல்கிறார் என பிக் பாஸ் அறிவித்தார்.

அதன் பின் இந்த வாரத்தில் சிறப்பாக செயல்பட்ட இருவரை தேர்ந்தெடுத்து கூறும்படி சொல்லப்பட்டது. அதில் சோம் மற்றும் ஆரி இறுதியில் தேர்வானார்கள். சோமிற்கு அதிகபட்சமாக மற்ற அனைவருமே வாக்களித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதை பார்த்து அவரே சர்ப்ரைஸ் ஆகிவிட்டார். ரம்யாவுக்கு அதிக அளவு வாக்குகள் வந்தது, ஆனால் இறுதியில் அவர் தேர்வாக வில்லை. அடுத்த வார தலைவர் டாஸ்கில் ஆரி, சோம் மற்றும் ரியோ போட்டியிடவுள்ளனர்.