பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் 13 போட்டியாளர்கள் உள்ளே இருக்கும் நிலையில் நேற்று அதிலிருந்து சனம் வெளியேறினார். ஹவுஸ்மேட்ஸ் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாக இவர்கள் யார் காப்பாற்ற படுவார்கள் என்று எண்ணினார்களோ அவரே வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஆனது. ஆம் சனம் வெளியேறுவதாக கமல் அறிவிக்க வீட்டில் ஒரு மயான அமைதி நிலவியது. 

கமல் கூறியதை கேட்டு அதிர்ச்சியான அனிதா, சனமிடம் சென்று கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார். ஆனால் சனமோ அமைதியாக நான் இதை எதிர்பார்த்தேன் என்று கூலாக கூறி வெளியேறுவதற்கு ஆயத்தமானார். இதைதொடர்ந்து சனமை வரவேற்ற கமல், முதலில் அவரை நீங்கள் உள்ளே செல்லும்போது இருந்த தமிழும் வெளியே வரும்போது இருக்கக்கூடிய தமிழிலும் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று பாராட்டினார். 

மேலும் நான் பலமுறை வீட்டில் இருப்பவர்களிடம் தனித்துவமாக விளையாடுங்கள் என்று கூறினேன். ஆனால் அதை சரியாக செய்தது நீங்கள் ஒருவரே என்று தெரிவித்த கமல், இந்த வெற்றியை நீங்கள் வெளியிலும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

உன்னை வெளியில் அனுப்பாமல் போகிறேன் என்கிற வருத்தம் மட்டும் தான் இருக்கிறது என நக்கலாக பாலாஜியிடம் கூறினார் சனம். வெளியில் போய் எனக்கு ஓட்டு போடு என பாலாஜி அவரை கிண்டலாக கேட்டுக்கொண்டார். அவர் மகிழ்ச்சியாக அனைவரிடமும் விடை பெற்று சென்றார். மற்ற போட்டியாளர்கள் அவரை கைதட்டி அனுப்பி வைத்தனர்.

நீங்கள் தைரியமான பெண்ணாக இருந்தீர்கள், இது உண்மையான வெற்றி என அவரை பற்றி வியந்து கூறினார். அதன் பின் ஓ ஓ சனம் பாடலை பாடும்படி கமலை கேட்டார். அதை கமல் நிறைவேற்றினார். அதன் பின் கமல் சனம் ஷெட்டியின் BB பயணம் பற்றி ஒரு வீடியோ காட்டினார். அதை பார்த்து சனம் அழுதுவிட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தலைவர் போட்டி நடைபெறுகிறது. இந்த முறை வீட்டில் இருக்கும் அனைவரும் கலந்து கொள்ளலாம் என அறிவித்தார் பிக்பாஸ். அதன் நடந்த போட்டியில் பிக்பாஸின் கேள்விக்கு சரியான பதிலை கூறிய அனிதாவை தூக்கி கொண்டாடினர் ஹவுஸ்மேட்ஸ். இதன் மூலம் இந்த வாரத்திற்கான தலைவராக அனிதா இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிதா வெளியேற வேண்டும் என்று நினைத்த ஆரியும், அவருக்கு வாழ்த்துக்களை கூறியது பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.