பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோவில் பேசும் கமல் அனிதா, ஷிவானி மற்றும் சனம் ஷெட்டி ஆகிய மூன்று பேரில் யார் இருக்க வேண்டும் என்பதை கேட்டறிந்தார். அதற்கு எல்லோரும் சனம் ஷெட்டி இருக்க வேண்டும் என்று சொல்ல ஆரி மட்டும் அனிதா வெளியே போவார் என்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆரி மீது சற்று கோபமாகி கமெண்ட்டுகளை வீசினர். 

நேற்றைய எபிசோடில் கமல் குறும்படம் போட்டதை பார்த்த இந்த நெட்டிசன், உண்மைக்கு கொஞ்சம் உயிரூட்டிய ஆண்டவருக்கு சல்யூட் என தெரிவித்துள்ளார். இதில் நேற்றைய எபிசோடில் ஆரியும், ரம்யா பாண்டியனும் காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் அனிதா, ஷிவானி மற்றும் சனம் ஷெட்டி ஆகியோரை நடுவில் உட்கார வைத்த கமல் மூன்று பேரில் யார் இருக்க வேண்டும் என்று கேட்கிறார்.

இந்நிலையில் இன்று வெளியான மூன்றாம் ப்ரோமோவில் பேசிய கமல், வீட்டில் ஓர் எண்ணமும் நாட்டில் ஓர் எண்ணமும் இருக்கக்கூடும் என்று துவங்கினார். போட்டியாளர்களுக்கு மக்கள் என்ன செய்தி அனுப்பியிருக்கிறார்கள் என்பதை பார்ப்போம் என்கிறார் கமல். 

மக்களின் தீர்ப்பை படித்து காண்பிக்கிறார் கமல். முடிவுகள் வந்தவுடன் அர்ச்சனா மற்றும் நிஷாவின் ரியாக்ஷன் சற்று அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. வெளியேறப்போகும் நபர் யார் என்பதை பார்க்கலாம். அனிதா கூறியது சற்று ஆச்சர்யபடுத்தும் வகையில் இருந்தது. வெளியே சென்றாலும் satisfied-ஆக போவேன் என்று கூறியுள்ளார். 

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் அனிதாவுடன் ஆரி மற்றும் ரியோ எப்போ சண்டை வரும் என்ற ஆவலில் உள்ளனர். இந்நிலையில் அனிதா வீட்டில் தங்கி விட்டால், வரும் டாஸ்க்குகளில் அவருக்கு மிகப் பெரிய சிக்கல் ஏற்படும் என்று கருதுகிறார்கள் பிக்பாஸ் ரசிகர்கள். அதுமட்டுமல்லாமல் அர்ச்சனா மேல் ரசிகர்களின் கோபம் திரும்பியுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா வேறு, பிக்பாஸ் அர்ச்சனா வேறு என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.