திருமண ஆசை காட்டி நெருக்கமாக பழகி வந்தபோது, இளம் பெண்ணின் குளியல் காட்சிகள் காதலன் வசம் சென்ற நிலையில், அந்த ஆபாசப் படத்தைக் காட்டி இளம் பெண்ணை மிரட்டி பணம் மற்றும் நகையைப் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வட மாநிலங்களில் தான், வித விதமான மோசடி சம்பங்கள் தொடர்ச்சியாக அரங்கேறுவதைக் கடந்த காலங்களில் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், தற்போது இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில், தமிழகத்திலும் அது போன்ற விதவிதமான மோசடிகள் தொடர்ச்சியாக அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன.

அப்படி ஒரு சம்பவம் தான், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அரங்கேறி இருக்கிறது.

சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், கடந்த 2012 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அந்த நிறுவனத்தில் உடன் பணிபுரிந்து வந்த ரமேஷ் என்ற இளைஞருடன், அந்த இளம் பெண்ணிற்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, கடந்த 2013 ஆம் ஆண்டு, அந்த இளம் பெண் மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அங்கு பணி புரிந்து வந்த போது, அங்கு அந்த இளம் பெண்ணுடன் பணிபுரிந்து வந்த முருகேசன் என்ற இளைஞனுக்கும், அந்த பெண்ணிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. 

இதனால், பயந்து போன அந்த இளம் பெண், தனக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனையைத் தீர்த்து வைக்க, தனது மனம் விரும்பிய ரமேஷ் உதவியை நாடி உள்ளார். அவரும், இந்த இளம் பெண்ணின் பிரச்சனையைத் தீர்த்து வைத்து உள்ளார்.

ஆனால், அது முதுல் ராமேஷ் மற்றும் அந்த இளம் பெண்ணும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலிக்கத் தொடங்கிய நிலையில், இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர்.

இப்படியாக, இவர்கள் இவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில், காதலன் ரமேஷ், திருமணம் செய்துகொள்வதாக அந்த இளம் பெண்ணுக்கு ஆசை வார்த்தைகள் கூறியதாகத் தெரிகிறது.

இப்படி அவர்கள் ஒருவர் ஒருவருடன் நெருங்கிப் பழகி வந்த நிலையில், ஒரு நாள் அந்த பெண் குளிக்கும் ஆபாச வீடியோ ஒன்று அந்த பெண்ணிற்கேத் தெரியாமல், ஏற்கனவே பிரச்சனை செய்த முருகேசனிடம் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. 

ஆனால், “அந்த ஆபாச வீடியோவை இணையத்தில் வெளியிடாமல் இருக்க 12 லட்சம் ரூபாய் கேட்டு முருகேசன் மிரட்டுவதாக” காதலன் ரமேஷ், அந்த பெண்ணிடம் கூறி இருக்கிறார்.

இதனால், பயந்து போன அந்த இளம் பெண், காதலன் ரமேஷிடம் இது வரை சுமார் 20 லட்சம் ரூபாய் பணத்தையும், 19 சவரன் தங்க நகைகளையும் கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படியாக இவர்களது வாழ்க்கை சென்றுகொண்டிருந்த நிலையில், தற்போது “காதலன் ரமேஷ் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால், அதிர்ச்சியை அடைந்த அந்த பெண் காதலனுடன் சண்டை போட்டு உள்ளார். 

அப்போது, அந்த இளம் பெண்ணின் சாதியைப் பற்றி அவதூறாகப் பேசி திட்டியதோடு, அந்த இளம் பெண்ணிற்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண் சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில், காதலன் ரமேஷ் மீது புகார் அளித்து உள்ளார். இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர், தற்போது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.