பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு நடுவில் பிரச்சனைகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் இந்த நான்காவது சீசனில் அது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. தினந்தோறும் ஏதாவது காரணத்தைச் சொல்லி போட்டியாளர்கள் வாக்குவாதம் செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. பாலாஜி மற்றும் ஆரி இடையேயான சண்டை நேற்றைய ஹைலைட்.

அதனை தொடர்ந்து அர்ச்சனா கால் சென்டர் ஊழியராக இருக்கும் நிலையில் அவருக்கு ஆஜித் கால் செய்து பேசினார். முதல் கேள்வியே அவர் லவ் பெட் பற்றி தான். அந்த கேங்கில் இருப்பவர்களை கடைசியாக எப்போது நாமினேட் செய்தீர்கள்? என கேட்டார். அதற்கு அர்ச்சனா செய்தது இல்லை ஏன் பதில் கூறியதால், அதற்கான காரணத்தை ஆஜித் கேட்டார். கருத்து வேறுபாடு இருந்தால் தான் நாமினேட் செய்ய முடியும் என அர்ச்சனா பதில் கூறினார்.

மேலும் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரையும் நாமினேட் செய்ய வேண்டும் என ஆஜித் கேட்க அர்ச்சனாவும் ஒவ்வொரு பெயராக கூறி நாமினேட் செய்தார். இறுதியில் ஆஜித் நாமினேட் செய்ய காரணம் இல்லை என கூறி அவர் போனை துண்டித்து விட்டார். 

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், கால் சென்டர் ஊழியராக இருக்கும் ரியோவிடம் அனிதா சம்பத் போன் செய்து பேசுகிறார். அனிதா அடுக்கிய அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளிக்கிறார் ரியோ. டாஸ்க் என்பதால் அமைதி காப்பதாக ரியோ புலம்பி கொண்டு செல்கிறார். இதை பார்த்த அர்ச்சனா இனி குரூப்பிஸத்திற்கு இடம் இருக்காது என்று மைண்ட் வாய்சில் பேசுவது ரசிகர்களுக்கு கேட்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர். 

ஏற்கனவே சனம் ஷெட்டியுடன் சேர்ந்து அனிதா செய்த விஷயங்களை ரியோ மறந்திருக்க மாட்டார் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த கால் சென்டர் டாஸ்க்கில் மேலும் பஞ்சாயத்து இருக்குமா என்ற ஆவலில் உள்ளனர் ரசிகர்கள். இன்னும் சோம் ஊழியராக கலந்து கொள்ளவில்லை. அதில் ரம்யா பேசுவாரா என்ற ஆவலும் ஒருபுறம் உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.