A.R.முருகதாசின் உதவி இயக்குனராக இருந்து டிமாண்டி காலனி படம் மூலம் இயக்குனர் ஆனவர் அஜய் ஞானமுத்து.இந்த படம் மிக சிறந்த பேய் படம் என பலரது வரவேற்புகளை பெற்றது.இதனை தொடர்ந்து இவர் இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா,அதர்வா,அனுராக் காஷ்யூப்,விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் கோப்ரா படத்தினை இயக்கிவந்தார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஆனந்த் ராஜ்,ரோபோ ஷங்கர்,மியா ஜார்ஜ்,மிர்னாலினி ரவி,பூவையார்,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.ஏழு வித்தியாச தோற்றங்களில் விக்ரம் இருக்கும் இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச்செய்தது.இந்த படத்தின் முதல் பாடலான தும்பி துள்ளல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கோப்ரா படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இந்த படத்தின் டப்பிங் வேலைகள் அக்டோபர் கடைசியில் தொடங்கியது.தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் சென்னையில் தொடங்கியுள்ளது.இந்த படப்பிடிப்பை தொடர்ந்து ரஷ்யாவில் மீதமுள்ள படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிகிறது.

 

chiyaan vikram cobra shoot resumes after lockdown ajay gnanamuthu