பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தி அதிகாரப்பூர்வமாக வெளியானதும் சமூக வலைதளங்களில் சுரேஷ் சக்ரவர்த்தி என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி பிக் பாஸ் ரசிகர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர். ரேகா, வேல்முருகன் போன்றவர்கள் வெளியே செல்லும் போது, அழுது தீர்த்த போட்டியாளர்கள் எல்லாம், டஃப் ஆன ஆளு வெளியே போயிட்டாரு, இனி கப்பு நமக்கு தான் என சிரிப்புடன் இருப்பதை பார்ப்பதற்கும் ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது என புலம்பி வருகின்றனர். 

இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களில் சுரேஷ் சக்ரவர்த்தி தான் தனது ஸ்டைலால், திறமையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாத்தா என்ற பெயருடன் ஈர்த்துள்ளார். பர்ஃபார்ம் என்று வந்து விட்டால் மனுஷன் தனது வயதை மறந்து இறங்கி அடித்து ஆடி கலக்குவதை கடந்த ஒரு மாதமாக பிக் பாஸ் ரசிகர்கள் நல்லாவே கண்டு ரசித்தனர். பிக் பாஸையே கலாய்ப்பது, கொளுத்திப் போடுறேன் என சொல்லியே கேம் ஆடிய கில்லாடி கிங் நம்ம மொட்டை தல சுரேஷ் தாத்தா தான்.

பிக்பாஸ் வீட்டில் நடிகர் ஆரி...என்ன அந்த டீம்லயும் சேர்த்துக்கல, இந்த டீம்லயும் சேர்த்துக்கல என இரு குரூப்புக்கும் நடுவே தனி மரமாக இருந்து கோபத்திற்கு ஆளானார். பாலாஜியின் நரி தந்திரத்தை அறிந்து கொண்ட அவர், அவருடன் சண்டை போட, இருவருக்கும் இடையே பயங்கர வாய் சண்டை நடந்து வருகிறது. நேற்றைய நிகழ்ச்சியை பார்த்தால், கை கலப்பு ஏற்படுமோ? என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. 

தறுதலை விவகாரம், சனம் ஷெட்டியுடன் சண்டை, ஆரியுடன் சண்டை என எல்லாத்துக்கும் சேர்த்து பாலாஜியின் சிரிப்பை கமல் சனிக்கிழமை நிகழ்ச்சியில் ஒட்டு மொத்தமாக நிறுத்தினார். மேலும், சண்டைக்கு போறதா இருந்தா, எம்.எம்.ஏ ஃபைட்டர் சோமசேகருடன் சண்டை போடுங்க என்று கலாய்த்து தள்ளினார். 

தற்போது வெளியான ப்ரோமோவில், இந்த வார எவிக்ஷனுக்கான நாமினேஷன் பட்டியலை அறிவித்தார் பிக்பாஸ். அதில் கேப்ரில்லா, ஷிவானி, ரம்யா, சுசித்ரா, அர்ச்சனா, ஆஜீத், பாலா ஆகியோரின் பெயர் இடம்பெற்றுள்ளது. நாட்கள் செல்ல செல்ல பிக்பாஸ் வீடு சூடுபிடிக்கிறது என்று ரசித்து வருகின்றனர் திரை ரசிகர்கள்.