பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தற்போது தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் பரத் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மிரள் திரைப்படம் மிரட்டலான திரில்லர் திரைப்படமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக முன்னறிவான் திரைப்படத்தில் தற்போது பரத் நடித்து வருகிறார். 

முன்னதாக பரத் நடித்த யாக்கை திரி மற்றும் 8 ஆகிய திரைப்படங்கள் நிறைவடைந்த நிலையில் நீண்ட காலமாக ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. இதனிடையே தனது திரைப்பயணத்தில் 50வது திரைப்படமாக பரத் நடித்துள்ள திரைப்படம் லவ். மிரள் படத்திற்கு பிறகு மீண்டும் லவ் திரைப்படத்தில் நடிகர் பரத்துடன் இணைந்து நடிகை வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். 

முன்னதாக மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான லவ் திரைப்படத்தின் ரீமேக்கான பரத்தின் லவ் திரைப்படத்தை முன்னணி வசனகர்த்தாவும் எழுத்தாளருமான RP.பாலா தனது RP ஃபிலிம்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ளார். PG. முத்தையா ஒளிப்பதிவில் அஜய் மனோஜ் படத்தொகுப்பு செய்யும் லவ் படத்திற்கு ரோனி ரேஃபல் இசையமைத்துள்ளார்.

பரத் மற்றும் வாணி போஜன் உடன் இணைந்து விவேக் பிரசன்னா, ராதா ரவி டேனியல் போப், ஸ்வயம் சித்தா, ஆடம்ஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் லவ் திரைப்படத்தின் விறுவிறுப்பான டீசர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் அனைவரும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த டீசர் இதோ…