உயிரே போனாலும் எனக்கு END கிடையாது... வைகைப்புயல் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் ஸ்பெஷல் வீடியோ!
By Anand S | Galatta | December 06, 2022 16:53 PM IST

தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற முன்னணி நட்சத்திர நகைச்சுவை நடிகராக திகழும் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் முதல்முறையாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தின் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் தயாரித்து நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
முன்னதாக தனது ஃபேவரட் கதாபாத்திரமான நாய் சேகர் கதாபாத்திரத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் நகைச்சுவை சரவெடியாக தயாராகி இருக்கும் திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். நாய் சேகர் கதாபாத்திரத்தை உருவாக்கிய இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் பக்கா காமெடி என்டர்டெய்னராக உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் வைகை புயல் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி சிவாங்கி, நடிகர் ஆனந்தராஜ், ஷிவானி நாராயணன், யூட்யூபர் பிரசாந்த் மற்றும் VJ விக்னேஷ் காந்த் ஆகியோர் நடிக்கின்றனர். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்ய, நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தேக பேட்டியில் வடிவேலு அவர்கள் தனது திரைப்பயணம் குறித்தும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது “எனது உயிரே போனாலும் எனது நகைச்சுவைகளை பார்த்து மக்கள் சந்தோஷமாக இருக்கப் போகிறார்கள் எனவே எனது உயிரே போனாலும் எனக்கு END கிடையாது” என வடிவேலு அவர்கள் தெரிவித்துள்ளார். வடிவேலுவின் அந்த முழு பேட்டி இதோ…