சின்னத்திரை வாயிலாக மக்களிடையே பிரபலமடைந்து தொடர்ந்து வெள்ளித்திரையிலும் முத்திரைப் பதித்து தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவான ப்ரின்ஸ் திரைப்படம் கடந்த தீபாவளி வெளியீடாக ரிலீசானது. 

முன்னதாக இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சைன்ஸ் ஃபிக்ஷன் காமெடி திரைப்படமான அயலான் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனையடுத்து உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். 

இதனிடையே மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, இயக்குனர் மிஷ்கின், பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் மாவீரன் படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாடல்களுக்காகவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் மாவீரன் திரைப்படத்தின் இசை மற்றும் பாடல்கள் உரிமைத்தை சரிகம SOUTH நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Elated & excited to associate with the much-loved @Siva_Kartikeyan starrer & @ShanthiTalkies's #MAAVEERAN🔥

A @bharathsankar12 musical🎼#MaaveeranOnSaregama@AditiShankarofl @madonneashwin @Mee_Sunil @DirectorMysskin @iYogiBabu @iamarunviswa @vidhu_ayyanna @philoedit pic.twitter.com/pYNOTJDIal

— Saregama South (@saregamasouth) December 6, 2022