பல கோடி தமிழ் திரையுலக ரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கும் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் அடுத்து தயாராக இருக்கும் திரைப்படம் தளபதி 67. மாஸ்டர் & விக்ரம் என அடுத்தடுத்து மெகா ஹிட் பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் தளபதி விஜய் நடிக்க இருப்பதால் தளபதி67 திரைப்படத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று டிசம்பர் 5ஆம் தேதி தளபதி 67 திரைப்படத்தின் பட பூஜை நடைபெற்ற நிலையில், தளபதி 67 படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிரடி அப்டேட்களுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனிடையே முன்னணி தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு.

முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.

அடுத்த ஆண்டு (2023) பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முன்னதாக வாரிசு திரைப்படத்தில் நடிகர் SJ.சூர்யா நடிப்பதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்த நிலையில் வதந்திகளுக்கு முடிவு கட்டி நடிகர் SJ.சூர்யா வாரிசு படத்தில் நடிப்பதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

வாரிசு திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான கார்த்திக் பழனியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் வாரிசு திரைப்படத்தின் நடிகர் நடிகைகள் அனைவரும் ஒவ்வொருவராக வாழ்த்துக்கள் கூறும் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் SJ.சூர்யா அவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பதால் SJ.சூர்யா வாரிசு படத்தில் நடித்திருப்பதை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். வைரலாகும் அந்த வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Sri Venkateswara Creations (@srivenkateswaracreations)