தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் ஆர்யா, இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் நடித்த சயின்ஸ் பிக்சன் த்ரில்லர் படமான கேப்டன் திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீஸானது. இதனைத் தொடர்ந்து முதல் முறை வெப்சீரிஸில் களமிறங்கியுள்ள ஆர்யா நடித்த தி வில்லேஜ் வெப்சீரிஸ் அடுத்து வெளியாகவுள்ளது.

த்ரில்லர் வெப் சீரியஸாக தயாராகியிருக்கும் தி வில்லேஜ் வெப் சீரிஸின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீசாகவுள்ளது. இந்த வரிசையில் அடுத்ததாக முதல்முறை கொம்பன் & விருமன் படங்களின் இயக்குனர் முத்தையா உடன் அடுத்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யா இணைகிறார்.

ஆர்யாவுடன் இணைந்து வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கும் #ARYA34 திரைப்படத்தை டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது. R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் #ARYA34 திரைப்படத்திற்கு GV பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

அனல் அரசு மாஸ்டர் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றும் #ARYA34 திரைப்படத்திற்கு சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்ற உள்ளார். இந்நிலையில் #ARYA34 படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #ARYA34 திரைப்படத்தின் பூஜை புகைப்படங்கள் இதோ…
 

With the blessings of the almighty, here’s the next one 🎥✨ #Arya34

Need all your prayers ✨🧿✨🧿@arya_offl @SiddhiIdnani @dir_muthaiya @VelrajR @gvprakash #AnalArasu @DrumsticksProd @ZeeStudiosSouth @TeamAimPR @arunprajeethm pic.twitter.com/cMkjUC7SNM

— Siddhi Idnani (@SiddhiIdnani) October 9, 2022