கடந்த ஆண்டில் (2021) டெடி, சார்பட்டா பரம்பரை, அரண்மனை 3, எனிமி என வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்த நடிகர் ஆர்யா அடுத்ததாக இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். முதல்முறை வெப் சீரிஸில் களமிறங்கியிருக்கும் ஆர்யாவின் தி வில்லேஜ் வெப்சீரிஸின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஆர்யாவின் த்ரில்லர் வெப்சீரிஸான தி வில்லேஜ் வெப்சீரிஸ் விரைவில் அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக டெடி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இணைந்த ஆர்யா இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் வெற்றிக் கூட்டணியில் தயாராகியுள்ள திரைப்படம் கேப்டன். 

பயங்கரமான காட்டிற்குள் அமானுஷ்யமான கொடூர விலங்குகளுக்கு மத்தியில் நடக்கும் கதைக்களமாக உருவாகியிருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்சன் த்ரில்லர் படமான கேப்டன் திரைப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க, சிம்ரன், காவியா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

யுவா ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்யுள்ள கேப்டன் திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள கேப்டன் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற செப்டம்பர் 8ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

சமீபத்தில் வெளிவந்த ஆர்யாவின் கேப்டன் திரைப்படத்தின் ட்ரைலர் திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேப்டன் படத்தின் சென்சார் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியானது. கேப்டன் திரைப்படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

We are Ready. CERTIFIED U/A 💪💪💪 See you in theatres on September 8th 😍😍😍@ShaktiRajan @tkishore555 @immancomposer @Udhaystalin @RedGiantMovies_ @ThinkStudiosInd pic.twitter.com/ycscsQfklD

— Arya (@arya_offl) August 30, 2022