சினிமா , சாதாரண மக்கள் தங்களோட கவலையை மறந்து ஜாலியா சந்தோஷமா கொண்டாடுற ஒரு விஷயம். 2 மணி நேரம் அல்லது 3 மணி நேரம் அவங்கள மறந்து வேற ஒரு உலகத்துக்கு அவங்கள கூட்டிட்டு போற ஒரு கருவி தான் சினிமா.பல மாற்றங்கள் பல பிரச்சனைகள் பல விமர்சனங்கள் இப்படி எது வந்தாலும் சினிமா பாக்குறவங்க குறைஞ்சது இல்ல.

தங்களோட சராசரி வாழ்க்கைல இருக்குற கஷ்டங்களை மறந்து அந்த 3 மணி நேரம் தர சந்தோசம் எப்பவுமே ஸ்பெஷல் தான்.பல படங்கள் ஹாலிவுட் ஸ்டைல்ல கம்மியான Runtime வெச்சு வந்து ஹிட் அடிச்சுருந்தாலும்.பாட்டு,Fight-ன்னு ஒரு Complete கமர்ஷியல் Entertainer படங்களுக்கு எப்பவுமே ரசிகர்கள் கிட்ட பெரிய வரவேற்பு இருந்துருக்கு.நம்ம தமிழ் சினிமாலேயே பல பெரிய படங்கள்,பிரம்மாண்ட படங்கள் வெளியவந்து செம ஹிட் அடிச்சுருக்கு.

சில படங்கள் 2 மணி நேரம் இருந்துருக்கலாம்,Length கம்மி பண்ணலாம்னு ரசிகர்கள் பல விமர்சனங்கள் சொல்லுவாங்க.அப்படிலாம் இல்லாம ரசிகர்களை Engage பண்ணி 3 மணி நேரமோ அதுக்கு மேலயோ Runtime வெச்சு வெளியாகி செம ஹிட் அடிச்ச படங்களை பத்தி தான் நம்ம இப்போ பாக்க போறோம்

இந்தியாவில் மட்டுமில்ல உலகம் முழுக்கவே சின்ன படங்கள் இருந்தாலும் 3 மணி நேரத்துக்கு மேல இருக்க படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கிறது நம்மளால பாக்க முடியும்.Black and White காலகட்டத்தில் பல படங்கள் 3 மணி நேரத்துக்கு மேல வந்து ஹிட் அடிச்சுருக்கு.அதுக்கு அடுத்து Audience டேஸ்ட் மாறிப்போக படங்களோட Length கம்மியாக ஆரம்பிச்சது.

அப்படி Runtime குறைய ஆரம்பிச்ச நேரத்துலயும் பல படங்கள் 3 மணி நேரத்துக்கு மேல வந்து பட்டையை கிளப்பியிருக்குநம்ம தமிழ் சினிமாவுல அப்படி 3 மணி நேரத்துக்கு மேல இருந்து ஹிட் அடிச்ச படங்கள் என்னென்னன்னு இப்போ பார்க்கலாம்

தமிழ் சினிமான்னு எடுத்துகிட்டாலே பல திறமைசாலிகளை உருவாகியிருக்கு , அதுல உலகமே வியந்து பார்க்குற ஒருத்தர் உலகநாயகன் கமல்ஹாசன்.பல விஷயங்களை நமக்கு தொடர்ந்து வித்தியாசமா புதுசா நமக்கு கொண்டு வருவாரு,என்ன ட்ரெண்ட் மாறினாலும் அவரோட படங்கள் நின்னு பேசும் அப்படி , 2 மணி நேரம் தான் படம் Audience பார்ப்பாங்கன்னு இருப்பாங்கன்னு சொல்றப்போ ஹே ராம்,இந்தியன்,தசாவதாரம்ன்னு பல படங்கள் 3 மணி நேரத்துக்கு மேல வந்து செம ஹிட் அடிச்சுருக்கு.அவரோட வித்தியாசமான முயற்சிகளுக்காகவே படம் செம ரீச் ஆச்சு

எப்படி கமல் தன்னோட நடிப்பால் நம்மளை ரசிக்க வைப்பாரோ அதே மாதிரி ஸ்டைல்னா நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான், அவர் முதல்தடவையா பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரோட சேர்ந்து எடுத்த சிவாஜி படம் தமிழ் சினிமாவோட மார்க்கெட்டை வேற லெவெலுக்கு எடுத்துட்டு போச்சு.

இதே மாறி தன்னோட படங்கள் மக்கள்கிட்ட பேசனும்னு நம்புற ஒரு இயக்குனர் ஷங்கர்,படத்துக்கு படம் பிரம்மாண்டம்ன்னு இவர் படம்னாலே ஏதோ ஒன்னு புதுசா இருக்கும்னு நம்பி மக்கள் வந்து பார்ப்பாங்க இவரோட எல்லா படமுமே கிட்டத்தட்ட 3 மணி நேரம் தான் அதுல சில படங்கள் சிவாஜி,இந்தியன்,நண்பன்,ஐ னு 3 மணி நேரம் தாண்டியும்பாக்ஸ் ஆபிஸ்ல வசூல் வேட்டை ஆடிருக்கு

இப்போ இருக்க டாப் ஹீரோக்கள்ல ஒருத்தர் தளபதி விஜய்.அவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரோட முதல் தடவையா இணைஞ்ச படம்தான் நண்பன்.பெரிய சமூகக்கருத்தோட அதோட ஜாலியாவும் ஒரு படத்தை இந்த கூட்டணி கொடுத்துருப்பாங்க.என்னதான் 3 இடியட்ஸ் படத்தோட ரீமேக்கா இருந்தாலும் இந்த படம் ரசிகர்கள் கிட்ட பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.பாட்டு,fight-ன்னு ஒரு செம Entertaining படமா கொடுக்குற விஜய் படமும் நிறைய படங்கள் 3 மணி நேரம் கிட்ட இருக்கது நம்மால கவனிக்க முடியும்.

இதை தவிர சேரன் நடிச்ச தவமாய் தவமிருந்து,மாயக்கண்ணாடி,மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே,செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனின்னு மக்கள் மனசை கவர்ந்த பல தமிழ் படங்கள் இருக்கு.

இதுபோக லகான்,ஜோதா அக்பர்,இப்போ Recent-ஆ வந்து செம ஹிட் அடிச்ச RRR படம் வர பல வேற மொழி படங்களும் 3 மணி நேரத்துக்கு மேல இருந்து ரசிகர்கள் கிட்ட நல்ல வரவேற்பை பெற்றிருக்கு.தமிழ் சினிமாவில் 3 மணி நேரத்துக்கு வந்து ஹிட் அடிச்ச சில படங்கள் இதோ

ஹே ராம் - 3 மணி நேரம் 21 நிமிடங்கள்
இந்தியன் - 3 மணி நேரம் 5 நிமிடங்கள்
தசாவதாரம் - 3 மணி நேரம் 5 நிமிடங்கள்
சிவாஜி தி பாஸ் - 3 மணி நேரம் 8 நிமிடங்கள்
நண்பன் -  3 மணி நேரம் 8 நிமிடங்கள்
ஐ - 3 மணி நேரம் 8 நிமிடங்கள்
மாயக்கண்ணாடி - 3 மணி நேரம்
தவமாய் தவமிருந்து - 3 மணி நேரம் 24 நிமிடங்கள்
அஞ்சாதே - 3 மணி நேரம் 11 நிமிடங்கள்
7ஜி ரெயின்போ காலனி - 3 மணி நேரம் 5 நிமிடங்கள்

நாளைக்கு ரிலீஸ் ஆகப்போற சியான் விக்ரமோட கோப்ரா படமும் 3 மணி நேரம் 3 நிமிஷம் Runtime வெச்சுருக்கு.இந்த படமும் இந்த லிஸ்ட்ல சேரும்னு ரசிகர்கள் ரொம்ப நம்பிக்கையோட காத்திருக்காங்க.