அக்னிச் சிறகுகள் படத்தின் தற்போதைய நிலை !
By Sakthi Priyan | Galatta | October 20, 2020 16:04 PM IST

விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்து வரும் படம் அக்னிச் சிறகுகள். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை மூடர் கூடம் புகழ் நவீன் இயக்கி வருகிறார். ஷாலினி பாண்டே, ரைமா சென், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே, அக்ஷரா ஹாசன், சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர். சீனுவாக விஜய் ஆண்டனி, விஜியாக அக்ஷரா ஹாசனும், ரஞ்சித் எனும் பாத்திரத்தில் அருண் விஜய்யும் நடித்து வருகின்றனர். நடராஜன் சங்கரன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பை நிறைவு செய்தார் நடிகர் அருண் விஜய். இதுகுறித்து படத்தில் நடிக்கும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். மீதம் இருக்கும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டீஸர் அல்லது ட்ரைலர் குறித்த அப்டேட் ஏதாவது கிடைக்கும் என்ற ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள்.
தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய்.தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது. தடம், செக்க சிவந்த வானம், மாஃபியா என ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி நடித்துள்ளார். மாஃபியா படத்தின் ரிலீஸை தொடர்ந்து அருண்விஜய் சினம்,பாக்ஸர்,அக்னி சிறகுகள்,அருண் விஜய் 31 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
கொரோனாவுக்கு முன் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வந்த படத்தில் விறுவிறுப்பாக நடித்து வந்தார். கொரோனா பாதிப்பு காரணாமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. சினம் படத்தை நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய GNR குமரவேலன் இயக்குகிறார். குப்பத்து ராஜா, சிக்ஸர் உள்ளிட்ட படங்களில் நடித்த பாலக் லால்வாணி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் அருண் விஜய் போலீசாக நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் நடந்து வந்தன.கொரோனா பாதிப்பு காரணமாக படம் குறித்த வேலைகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
விவேக் இயக்கத்தில் பாக்ஸர் படத்தில் நடிக்கவிருக்கிறார் அருண்விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். பாக்ஸர் படத்தின் கேரக்டருக்காக மலேசியா மற்றும், வியட்நாமில் சிறப்பு பயிற்சிகளை எடுத்து வந்தார் அருண் விஜய். இமான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். கடந்த ஆண்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் அருண் விஜய்யின் உடலமைப்பு பலரையும் கவர்ந்தது.
Prabhas' Radhe Shyam with Pooja Hegde to have no fights: Report
20/10/2020 04:24 PM
OFFICIAL: After Putham Pudhu Kaalai, it is a gangster film for Bobby Simha!
20/10/2020 04:18 PM
Housemates attempt to trigger Rio | latest Bigg Boss promo | Suresh Chakravarthy
20/10/2020 03:14 PM
Law college student shocked after her teen movie scenes appear on adult websites
20/10/2020 02:38 PM