நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நூலிழை வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டிகள் கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் சுற்றை நெருங்கிக்கொண்டு இருக்கின்றன. இதனால், “சென்னை அணி கோப்பையை வெல்வதைக் காட்டிலும், ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு இருக்கா? இல்லையா?” என்பதே மிகப் பெரிய கேள்வியாக சென்னை ரசிகர் மத்தியில் எழுந்திருக்கும் மிகப் பெரிய கேள்வியாக உள்ள நிலையில், நேற்றைய போட்டியில் சென்னை அணி தோற்றதின் மூலமாக அது பெரும் விவாத பொருளாக மாறியது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இவ்விரு அணிகளும் இதுவரை தலா 9 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 6 தோல்வி என்று 6 புள்ளியுடன் சம நிலைமையில் சம பலத்துடன் இருந்த நிலையில், நேற்றைய போட்டியில் சென்னை அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எளிதில் தோற்கடித்தது. இதனால், சென்னை அணிக்கு ப்ளே ஆஃப் சுற்றுக்குக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு மேலும் மங்கி உள்ளன.

அத்துடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொருத்தவரை எஞ்சி இருப்பது இன்னும் 4 போட்டிகள் மட்டுமே. இந்த 4 ஆட்டங்களிலும் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்த 4 போட்டியிலும் வெற்றி பெற்றால் தான், அடுத்த சுற்றான பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நுழையக் கொஞ்சமாவது வாய்ப்பு இருக்கம். ஆனால், இப்போது உள்ள சென்னை அணியை பொருத்தமட்டில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்துமே சொதப்பி வருவதால், அவர்கள் இந்த வருட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிச் செல்வதில் சிரமம் இருக்கும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கணித்து உள்ளனர். 

அதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வரை 10 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில், இதில் 3 ல் மட்டுமே வெற்றி பெற்று உள்ளன. இதன் காரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

இதனால் இனி வரக்கூடிய 4 போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கட்டாயமாக வெற்றி பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அப்படி வெற்றி பெற்றால் சென்னை அணி 14 புள்ளிகளை பெறும். இதனால், ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்புகளைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்.

அதே நேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னொரு போட்டியில் தோற்றால் சென்னை அணியானது நிச்சயமாக ஐபிஎல் தொடரில் இருந்து நீடிக்காமல் கண்டிப்பாக வெளியேறும். 

குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்து வரும் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. மாறாக பஞ்சாப், ஐதராபாத், ராஜஸ்தான் ஆகிய அணிகள் இனி வரும் போட்டிகளில் எப்படி விளையாடப் போகிறது என்பதைப் பொறுத்துத் தான் சென்னை அணிக்கான அடுத்து சற்று வாய்ப்பும் உறுதி செய்யப்படும். இதனால், பஞ்சாப், ஐதராபாத், ராஜஸ்தான் ஆகிய அணிகள் இனி வரும் போட்டிகளில் பெறும் வெற்றி - தோல்வியைப் பொறுத்தே சென்னை அணியின் ப்ளே ஆஃப் கனவு இருக்கிறது.

இதனிடையே, “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தோனி இருப்பதால் இன்னும் கூட ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற வாய்ப்பு இருப்பதாக” இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்து உள்ளார்.