வேர்ல்ட்வைட் ரீச் ஆன தளபதி விஜய் பாடல் ! வைரல் வீடியோ
By Aravind Selvam | Galatta | October 20, 2020 15:57 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்.இவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் வசூல் சாதனை புரிந்து அந்த ஆண்டின் பெரிய லாபம் ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றது.இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்து திரையரங்குகள் சகஜ நிலைக்கு திருப்பியதும் மாஸ்டர் படத்தினை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.கொரோனா தடுப்பு பணிகளில் விஜய் ரசிகர்கள் தொடக்கத்தில் இருந்து தங்கள் பங்கை சிறப்பாக செய்து வருகின்றனர்.இவரது பிறந்தநாளுக்கும் விஜய் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து நண்பர்களுடன் வீடியோகால்,மகேஷ் பாபுவின் சவாலை ஏற்றது என்று ஒரு சில முறை தளபதியின் புகைப்படங்கள் வெளியாகி தாறுமாறாக ட்ரெண்ட் அடித்தன.பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள இவரை பற்றி என்ன தகவல் வந்தாலும் சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி விடும்.தற்போது விஜயின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வெளிநாட்டு பெண் ஒருவர் விஜயின் அழகிய தமிழ் மகன் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடலான மார்லின் மன்றோ பாடலை பாடி அசத்தியுள்ளார்.இந்த பாடலை இவர் பாடும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
#Master @actorvijay Global Icon For Reason ❤#Thalapathy #Vijay #தளபதிவிஜய் pic.twitter.com/NRkLz4sJmM
— Rohitram (@rohitramm27) October 19, 2020
Housemates attempt to trigger Rio | latest Bigg Boss promo | Suresh Chakravarthy
20/10/2020 03:14 PM
Law college student shocked after her teen movie scenes appear on adult websites
20/10/2020 02:38 PM
STR to make a strong comeback on October 22 - Trending Promo Video here!
20/10/2020 01:21 PM