பள்ளிக்கூடம் போகும் வயதில் நடித்த படுக்கை அறை காட்சிகளானது, சினிமாவில் இடம் பெறாமல் நீக்கப்பட்ட அந்த ஆபாச காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவியதால் நடிகை ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான இளம் நடிகை சோனா ஆபிரகாம், தற்போது அங்கு சட்டம் படித்து வருகிறார். இவருக்கு 14 வயது இருக்கும் போது, அவர் அங்குள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தார். அப்போது, அவரது குடும்ப வறுமை காரணமாக, அவரது பெற்றோர் ஒரு சினிமாவில் நடிக்க கூறியதாகத் தெரிகிறது.

அதன்படி, மலையாள இயக்குனர் சதீஷ் அனந்தபுரி இயக்கிய ஒரு படத்தில், அவர் படுக்கை அறை காட்சியில் நடித்து உள்ளார். அந்த படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால், அந்த காட்சிகள் அனைத்தும் அந்த படத்தில் இடம் பெறவில்லை. எடிட்டிங்கில் அந்த காட்சிகள் அதிரடியாக நீக்கப்பட்டன. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த நடிகை தற்போது அங்கு சட்டம் படித்து வரும் நிலையில், தான் 10 ஆம் வகுப்பு நடித்த போது படமாக்கப்பட்டு படத்திலிருந்து நீக்கப்பட்ட அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி உள்ளது. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம் நடிகை சோனா ஆபிரகாம், வீட்டில் தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதனையடுத்து, அவரது பெற்றோர், மருத்துவமனையில் அனுமதித்துக் காப்பாற்றி உள்ளனர்.

இதனையடுத்து, “சமூக வலைத்தளங்களில் பரவி உள்ள தனது ஆபாச வீடியோ காட்சிகளை நீக்க கோரி” நடிகை சோனா ஆபிரகாம், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், “கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படத்தின் காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்ட பிறகு, கடந்த 2014 ஆம் ஆண்டு பல்வேறு சமூக வலைத்தளங்கள் மற்றும் யூடியூபில் பரவத் தொடங்கி உள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டு உள்ளார். 

அத்துடன், தனக்கு நேர்ந்த அவமானம் குறித்தும், சமூக வலை தளங்களில் தன்னுடைய ஆபாச காட்சி வெளியான பின்னணி குறித்தும் வீடியோ ஒன்றை அந்த நடிகை தற்போது வெளியிட்டு உள்ளார். அதில் பேசி உள்ள நடிகை சோனா ஆபிரகாம், “நான் 14 வயதில் தான், காதல் சந்தியாவுக்கு தங்கையாக, பார் சேல் என்ற மலையாள படத்தில் நடித்தேன். படத்தில் தான் பலாத்காரம் செய்யப்படுவதைப் பார்த்ததும் சகோதரியான காதல் சந்தியா தற்கொலை செய்து கொள்வது போல, படத்தின் இயக்குனர் சதீஷ் அனந்தபுரி படம் எடுத்திருந்தார்.

150 பேர் முன்னிலையில் பலாத்கார காட்சியைப் படமாக்க இயக்குனர் சதீஷ் அனந்தபுரி முடிவு செய்திருந்த நிலையில், நான் நடிக்க மறுத்ததால், என்னை வற்புறுத்தி இயக்குனர் அலுவலகத்திற்குள் வைத்து பலாத்கார காட்சியைப் படமாக்கினார்கள். அந்த காட்சி குறித்த புரிதல் ஏதும் அப்போது எனக்கு இல்லை. அப்போது, நான் 10 ஆம் வகுப்பு படித்து வந்த நான், மறு நாள் வழக்கம் போல பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டேன். அந்த படம் வெளியான போது கூட முறையாக எடிட் செய்யப்பட்டு ஆபாச காட்சிகள் இல்லாமல் வெளியானது. ஆனால், படம் வெளியாகி 2 ஆண்டுகள் கழித்து எடிட் செய்யப்படாத ஆபாச காட்சிகள் சமூக வலைத்தளங்களில் யாரோ பரப்பி விட்டு உள்ளனர்.

அது பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் பரவிவருவதாக சில மாதங்களுக்கு முன்பு எனது கவனத்துக்குத் தெரிய வந்ததும். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த நான், அதனை நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள முதல்வர், டிஜிபி, சைபர் கிரைம் காவல் துறையினர் என அனைவரையும் சந்தித்து புகார் அளித்தேன்.

ஆனால், அந்த வீடியோக்களை நீக்க இது வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அந்த வீடியோக்கள் பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் ஆபாச இணையதளங்களிலும் தொடர்ந்து பரவிவருவதால், பல தரப்பில் இருந்தும் எனக்கும் தனது குடும்பத்திற்கும் ஏற்பட்ட அவமானத்தால் மன அழுத்தம் இதன் தொடர்ச்சியாக, 14 வயது சிறுமியை பலாத்கார காட்சியில் வற்புறுத்தி நடிக்க வைத்த இயக்குனர் சதீஷ் அனந்தபுரிக்கும், தணிக்கையில் நீக்கப்பட்ட ஆபாச காட்சிகளை வெளியிட்ட பார் சேல் படக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கும் எதிராகப் பலரும் தங்களது கண்டன குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர். இதனால், மலையாள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.