இறுதிக்கட்டத்தில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் - அருண் விஜயின் அதிரடி ஆக்ஷன் படம்.. செம்ம அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!

மிஷன் சாப்டர் 1 பட டப்பிங்கில் அருண் விஜய்,arun vijay started his dubbing for mission chaper 1 movie lyca productions | Galatta

அருண் விஜயின் அடுத்த அதிரடி திரைப்படமாக வெளிவரா இருக்கும் மிஷன் சாப்டர் ஒன் திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியானது. தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக தனக்கே உரித்தான ஸ்டைலில் அதிரடியான படங்களில் நடித்து வருபவர் நடிகர் அருண் விஜய். கடந்த 2022 ஆம் ஆண்டில் தனது மகன் அர்ணவ் விஜயை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய படமான ஓ மை டாக், முன்னணி கமர்சியல் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அதிரடி ஃபேமிலி என்டர்டெய்னர் படமாக யானை, மற்றும் க்ரைம் திரில்லர் படமாக வந்த சினம் ஆகிய திரைப்படங்கள் அருண் விஜய் நடிப்பில் வரிசையாக வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. தொடர்ந்து அடுத்தடுத்து அதிரடியான திரைப்படங்கள் அருண் விஜய் நடிப்பில் வெளிவர தயாராகி வருகின்றன

முன்னதாக இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த பார்டர் திரைப்படமும், இயக்குனர் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் & விஜய் ஆண்டனி இணைந்து நடித்த அக்னி சிறகுகள் திரைப்படமும் நீண்ட நாட்களாக ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கத்தில் தற்போது வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். இதனிடையே தனது திரை பயணத்தில் அடுத்த அதிரடி ஆக்சன் படமாக அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் அச்சம் என்பது இல்லையே. அச்சம் என்பது இல்லையே திரைப்படத்தின் டைட்டில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு மிஷன் சாப்டர் 1 என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் AL.விஜய், மிஷன் படத்தை இயக்கியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமாக இயக்கிய தலைவி திரைப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த திரைப்படமாக அருண் விஜய் உடன் இயக்குனர் AL.விஜய் இணைந்த இந்த, மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தில் எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க அபி ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் மற்றும் நியூ மார்ச் ஃபர்ஸ்ட் பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தில் சந்திப்.K.விஜய் ஒளிப்பதிவில், ஆண்டனி படத்தொகுப்பு செய்ய ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். A.மகாதேவ் கதை திரைக்கதையில் இயக்குனர் விஜய் வசனம் எழுதி இயக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கும் மிஷன் சாப்டர் 1 படத்திற்கு ஸ்டண்ட் சில்வா ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

லைகா ப்ரொடக்ஷன்ஸ் வழங்கும் அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 திரைப்படம் தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளில் விரைவில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த மிஷன் சேப்டர் 1 திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடை நிலையில் தற்போது இறுதி கட்டப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றனர். இந்த நிலையில் சென்சாருக்காக தற்போது மிஷின் சேப்டர் 1 திரைப்படம் தயாராகி வரும் நிலையில் அதற்கான டப்பிங் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக நடிகர் அருண் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இதனை அறிவிக்கும் வகையில் டப்பிங் ஸ்டுடியோவில் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் இதோ…
 

Giving the final touches before censorship for #Mission - Chapter 1 #DirVijay @iamAmyJackson @gvprakash @LycaProductions Prod Rajashekar .. Gearing up for release!!🤗 pic.twitter.com/dXDfAxbuHf

— ArunVijay (@arunvijayno1) July 1, 2023

சினிமா

"SK ரசிகர்களே ரெடியா?"- சிவகார்த்திகேயனின் மாவீரன் பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு… கவனத்தை ஈர்க்கும் புது GLIMPSE இதோ!

பரபரக்கும் உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 பட செம்ம ஷூட்டிங் அப்டேட் கொடுத்த காஜல் அகர்வால்! ட்ரெண்டிங் புகைப்படம் உள்ளே
சினிமா

பரபரக்கும் உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 பட செம்ம ஷூட்டிங் அப்டேட் கொடுத்த காஜல் அகர்வால்! ட்ரெண்டிங் புகைப்படம் உள்ளே

கில்லர் கில்லர் 'கேப்டன் மில்லர்' வரார்!- தனுஷின் அதிரடியான லுக்கில் வந்த கேப்டன் மில்லர் பட மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!
சினிமா

கில்லர் கில்லர் 'கேப்டன் மில்லர்' வரார்!- தனுஷின் அதிரடியான லுக்கில் வந்த கேப்டன் மில்லர் பட மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!