பரபரக்கும் உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 பட செம்ம ஷூட்டிங் அப்டேட் கொடுத்த காஜல் அகர்வால்! ட்ரெண்டிங் புகைப்படம் உள்ளே

கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பில் காஜல் அகர்வால்,kajal aggarwal shared a shooting spot photo of indian 2 | Galatta

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவலை நடிகை காஜல் அகர்வால் பகிர்ந்து கொண்டார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் இந்த 2023 ஆம் ஆண்டில் ஹாரர் காமெடி படமான கோஷ்டி மற்றும் ஹாரர் திரில்லர் படமான கருங்காப்பியம் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து பாலிவுடில் தயாராகும் உமா எனும் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காஜல் அகர்வால் அடுத்ததாக தெலுங்கில் அதிரடி ஆக்சன் படமாக தயாராகும் சத்தியபாமா எனும் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். முன்னதாக பாலிவுட்டில் வெளிவந்த குயின் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக காஜல் அகர்வால் நடித்திருக்கும் பாரிஸ் பாரிஸ் திரைப்படம் நிறைவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

இதனிடையே உலகநாயகன் கமல்ஹாசன் உடன் முதல் முறையாக காஜல் அகர்வால் இணைந்து நடித்து வரும் திரைப்படம் தான் இந்தியன் 2. முன்னதாக கடந்த 1996 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தியன் படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் - உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் தான் இந்தியன் 2. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் உடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளை கடந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த சில வாரங்களில் இந்தியன் 2 திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படத்தின் பிரதான காட்சிகளை பார்த்த கமலஹாசன் அவர்களுக்கு இந்தியன் 2 திரைப்படம் மிகவும் பிடித்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு விலை உயர்ந்த "PANERAI" வாட்சை பரிசளித்துள்ளார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த நடிகை காஜல் அகர்வாலிடம் ரசிகர் ஒருவர் இந்தியன் 2 பற்றி கேட்டபோது, "நான் தற்சமயம் இந்தியன் 2 படத்திற்கான லொகேஷனில் தான் இருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரத்தின் மீது மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். திரைப்படமும் படக்குழுவும் விரைவில் நீங்கள் அனைவருக்கும் படத்தை பார்ப்பதற்காக காத்திருக்கிறது." என குறிப்பிட்டு இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட்டாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ…
dhanush in captain miller movie first look poster out now arun madheswaran

சினிமா

"மாமன்னன் படம் தாத்தா பார்த்திருந்தா!"- கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின்! வைரல் வீடியோ

சமுத்திரகனியின் வினோதய சித்தம் ரீமேக்... பவன் கல்யாண் சாய் தேஜ் இணைந்து கலக்கும் ப்ரோ பட அட்டகாசமான டீசர் இதோ!
சினிமா

சமுத்திரகனியின் வினோதய சித்தம் ரீமேக்... பவன் கல்யாண் சாய் தேஜ் இணைந்து கலக்கும் ப்ரோ பட அட்டகாசமான டீசர் இதோ!

சினிமா

"விஜய் சாருக்கு கதை சொல்லியிருக்கிறேன்!"- தளபதி ‘FANBOY MOMENT’ பகிர்ந்த மாரி செல்வராஜ்! ட்ரெண்டிங் வீடியோ