தொடர்ந்து ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகர் அருண் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து அக்னிச் சிறகுகள், பார்டர், சினம் மற்றும் பாக்சர் ஆகிய ஆக்சன் ப்ளாக் திரைப்படங்கள் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன. 

முன்னதாக ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸ் விரைவில் சோனி லைவ் தளத்தில் ரிலீஸாகவுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு அருண்விஜய் நடிப்பில் வெளிவந்த யானை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகியிருக்கும் யானை திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, யோகிபாபு, அம்மு அபிராமி மற்றும் விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள யானை திரைபடத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

முன்னதாக இன்று ஜூலை 8-ம் தேதி யானை திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிலையில் தற்போது யானை திரைப்படத்தில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட எமோஷனலான காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அசத்தலான அந்தக் காட்சி இதோ…