அதிரடியான ஆக்ஷன் திரில்லர் திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்த நடிகர் அருண் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. முன்னதாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படம் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள பார்டர் திரைப்படம் ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், மீண்டும் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் புதிய வெப்சீரிஸில் அருண்விஜய் நடித்து வருகிறார். மேலும் அருண் விஜய் நடிப்பில் அக்னிச்சிறகுகள், பாக்சர் மற்றும் சினம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் அடுத்ததாக அருண் விஜய் நடிப்பில் வெளிவர உள்ள திரைப்படம் ஓ மை டாக். நடிகர் அருண்விஜய், அவரது மகன் அர்னவ் மற்றும் அவரது தந்தை விஜயகுமார் மூவரும் இணைந்து நடித்துள்ள ஓ மை டாக் படத்தில் நடிகை மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்க, நடிகர் வினய் வில்லனாக நடித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள ஓ மை டாக் படத்தை சரோ சரவணன் எழுதி இயக்க, கோபிநாத் ஒளிப்பதிவில் நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஓ மை டாக் திரைப்படம் வருகிற ஏப்ரல் 21-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.