முன்னணி கன்னட நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்து கன்னடத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பல மொழிகளிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த திரைபடம் கேஜிஎஃப் சாப்டர் 1. இதனையடுத்து  உருவான கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி உலகெங்கும்  திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. 

இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில், அதிரடியான ராக்கி கதாபாத்திரத்தில் நடிகர் யாஷ் நடிக்க, ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாக நடித்துள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 பட்த்தின் மிரட்டலான வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன், ஈஸ்வரி ராவ், அனன்ட் நாக், மாளவிகா அவினாஷ் ஆகியோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

புவன் கௌடா ஒளிப்பதிவில், ரவி பஸ்ருர் இசையமைத்துள்ள, கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தை HOMBALE பிலிம்ஸ் தயாரித்துள்ளது. கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தற்போது புதிய பாடல் ஒன்று வெளியானது

முன்னதாக வெளிவந்த கேஜிஎஃப் சாப்டர் 1 திரைப்படம் அதிரடி ஆக்ஷனில் ரசிகர்களை கவர்ந்தது போலவே அம்மா சென்டிமென்ட் காட்சிகளிலும் பாடலிலும் எமோஷனலில் கலங்கடித்தது. அந்தவகையில் கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்திலும் அகிலம் நீ எனும் அம்மா கதாபாத்திரத்தின் எமோஷனல் பாடல் தற்போது வெளியானது. அந்தப் பாடல் இதோ…