திருட போய் சுவர் ஓட்டையில் சிக்கிக்கொண்ட திருடன்!

திருட போய் சுவர் ஓட்டையில் சிக்கிக்கொண்ட திருடன்! - Daily news

ஆந்திர மாநிலத்தில் அம்மன் கோயிலில் சுவாமி நகைகளை திருடிய இளைஞர் ஒருவர், சுவரின் ஓட்டை வழியாக வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில்  ஜாடுபுடி கிராமத்தில் அமைந்துள்ளது கிராம தேவதையான எல்லம்மா கோயில். இந்தக் கோவிலில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டுள்ள நகைகளை திருடுவதற்காக பாப்பாராவ் என்கிற இளைஞர் கோவில் சுவற்றில் ஏறி அதில் உள்ள ஓட்டை வழியாக உள்ளே நுழைந்திருக்கிறார். அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த நகைகளை திருடிவிட்டு பின்னர் மீண்டும் அதே  ஓட்டை வழியாக வெளியேற முயன்றிருக்கிறார் பாப்பாராவ்.

ஆனால் இந்நிலையில் பாப்பாராவ் வெளியே வர முடியாமல் அந்த ஓட்டையில் வசமாக சிக்கிக்கொண்டார்.  என்னவென்றால் அதாவது அவருடைய பாதி உடல் மட்டுமே கோவிலுக்கு வெளியிலும், இடுப்புக்கு கீழான மீதி பாதி உடல் கோவிலுக்கு உள்ளேயும் சிக்கி கொண்டது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பாப்பாராவை மீட்டு தண்ணீர் கொடுத்துள்ளனர். 

அதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் பின்னர் அவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மதுபோதையில் இவ்வாறு திருட்டில் ஈடுபட்டதாக பாப்பாராவ் தெரிவித்திருக்கிறார். பாப்பாராவ் கோவிலில் சிக்கியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Comment