இந்தியாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் தளபதி விஜயின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது. இதனை தொடர்ந்து அடுத்த பிரம்மாண்ட ஹிட்டடிக்க தயாராகி வருகிறது விஜயின் பீஸ்ட்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இசையில் பாடல்கள் ட்ரெண்டாக, சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த பீஸ்ட் படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வருகிற ஏப்ரல் 13ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக  பீஸ்ட் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

அடுத்ததாக விஜய் முன்னணி தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் #தளபதி66 படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரவீன் படத்தொகுப்பு செய்ய முதல்முறையாக தளபதி விஜய் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தளபதி66 திரைப்படத்தின் பட பூஜை இன்று (மார்ச் 6) சென்னையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக படத்தின் படபூஜை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ…