தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் அனிருத்.தனது சூப்பர்ஹிட் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து , ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் அனிருத்.

கடந்த சில வருடங்களாக பெரிய ஹீரோக்களின் படங்கள் அனிருத் இசை இல்லாமல் வெளிவருவதில்லை , பல படங்களுக்கு பக்கபலமாக அனிருத் இருந்துள்ளார்.பீஸ்ட்,டான்,காத்துவாக்குல ரெண்டு காதல்,விக்ரம் என வரிசையாக இவர் இசையமைத்த படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன.

அடுத்ததாக AK 62,இந்தியன் 2,தலைவர் 169 என பல முக்கிய படங்களுக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் அனிருத் ரசிகர்களுடன் எப்போதும் டச்சில் இருப்பார்.தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

இவரது கான்செர்ட் ஒன்று செப்டம்பர் மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ளது.இதற்கான மலேசியா பிரஸ்மீட்டில் கலந்துகொண்டார் அனிருத்.இதில் ரசிகர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளித்த அனிருத் கடைசியாக பீஸ்ட் படத்தின் சூப்பர்ஹிட் பாடலான அரபிக்குத்து பாடலை பாடி அசத்தினார்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.