கவனத்தை ஈர்க்கும் குலுகுலு படத்தின் டீசர் இதோ!
By Anand S | Galatta | July 13, 2022 18:49 PM IST
தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் ரத்னகுமார் தனது முதல் படமான மேயாதமான் திரைப்படத்திலேயே அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார். இதனையடுத்து ரத்னகுமார் இயக்கத்தில் வெளிவந்த ஆடைக்கு திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
நல்ல இயக்குனராக மட்டுமல்லாமல் சிறந்த வசனகர்த்தாவாகவும் திரைக்கதை ஆசிரியராகவும் விளங்கும் இயக்குனர் ரத்னகுமார், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த மாஸ்டர் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் ஆகிய திரைப்படங்களுக்கு வசனகர்த்தா மற்றும் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் குலுகுலு. சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள குலு குலு திரைப்படம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட வருகிற ஜூலை 29-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.
சந்தானத்துடன் இணைந்து அதுல்யா சந்த்ரா கதாநாயகியாக நடிக்க, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் ,மரியம் ஜார்ஜ், லொள்ளுசபா மாறன், லொள்ளுசபா சேஷு, TSR ஆகியோர் குலு குலு படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் குலுகுலு திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. கவனத்தை ஈர்க்கும் அந்த டீசர் இதோ…