புஷ்பா 2 படத்திற்கு பின் அல்லு அர்ஜுன் உடன் 4வது முறை இணையும் பிளாக்பஸ்டர் இயக்குனர்... புது பட மாஸான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அல்லு அர்ஜுன் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணையும் புதிய பட அறிவிப்பு,allu arjun trivikram srinivas reunite for the fourth time in new movie | Galatta

தெலுங்கு சினிமாவின் நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது நடித்துவரும் புஷ்பா 2 திரைப்படத்திற்கு பிறகு அடுத்த நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது. தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த புஷ்பா - தி ரைஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் வேட்டை நடத்தியது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தை தொடர்ந்து அதன் 2வது பாகமான புஷ்பா 2 - தி ரூல் திரைப்படம் தற்போது மிகப் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் இரண்டாம் பாதியில் மிரட்டலான வில்லனாக SP பன்வார் சிங் எனும் காவல்துறை அதிகாரியாக மிரள வைத்த ஃபகத் பாசில் 2வது பாகத்தில் என்ன செய்யப் போகிறார். புஷ்பா - பன்வார் சிங் மோதல் எப்படி இருக்கும் என பெரும் எதிர்பார்ப்புகளோடு ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

தற்சமயம் புஷ்பா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியானது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ், அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.  இயக்குனராக மட்டுமல்லாமல் திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாக மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்காக பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்த பீம்லா நாயக் படத்திற்கு திரைக்கதை எழுதிய திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் விரைவில் சமுத்திரக்கனி இயக்கத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் வெளி வரவிருக்கும் ப்ரோ படத்திற்கும் திரைக்கதை வசனங்களை எழுதி இருக்கிறார். இவரது இயக்கத்தில் மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன், பவர் ஸ்டார் பவன் கல்யாண் என நட்சத்திர நாயகர்கள் அனைவரும் நடித்த ஒவ்வொரு திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கின்றன. 

ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டு ஜுலாயி மற்றும் கடந்த 2015 ஆம் ஆண்டு சன் ஆஃப் சத்தியமூர்த்தி என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் - அல்லு அர்ஜுன் கூட்டணியின் ஹாட்ரிக் வெற்றி படமாக கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்த அல வைகுந்தபுரம்லோ படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தின் புட்டபொம்மா பாடல் ட்ரெண்டடித்தும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த வெற்றிக் கூட்டணி நான்காவது முறையாக புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளது. முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான ஹாரிக்கா & ஹாசினி கிரியேஷன்ஸ் மற்றும் கீதா ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் இந்த திரைப்படத்தின் இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த அட்டகாசமான அறிவிப்பை அறிவிக்கும் வகையில் புதிய வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அட்டகாசமான அந்த வீடியோ இதோ…
 

“அந்த வீடு செய்ய ரொம்ப கஷ்டபட்டோம்” மாமன்னன் படத்தின் கலை இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. – முழு நேர்காணல் உள்ளே..
சினிமா

“அந்த வீடு செய்ய ரொம்ப கஷ்டபட்டோம்” மாமன்னன் படத்தின் கலை இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. – முழு நேர்காணல் உள்ளே..

உலகளவில் பிரம்மாண்டமாக ரிலீஸாகும் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ -  அட்டகாசமான அறிவிப்புடன் வைரலாகும் வீடியோ..
சினிமா

உலகளவில் பிரம்மாண்டமாக ரிலீஸாகும் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ - அட்டகாசமான அறிவிப்புடன் வைரலாகும் வீடியோ..

“என் கருத்திற்கு வலிமை சேர்க்கும் மாமன்னன்..” படக்குழுவினரை வாழ்த்திய உலகநாயகன் கமல் ஹாசன்.!
சினிமா

“என் கருத்திற்கு வலிமை சேர்க்கும் மாமன்னன்..” படக்குழுவினரை வாழ்த்திய உலகநாயகன் கமல் ஹாசன்.!