புது கெட்டப்பில் ‘கேப்டன் மில்லர்’ தனுஷ்..! திருப்பதி கோயிலில் மகன்களுடன் நேர்த்திக்கடன் செலுத்திய வீடியோ இணையத்தில் வைரல்..

திருப்பதி கோவிலில் நேர்த்திகடன் செலுத்திய தனுஷ் வைரல் வீடியோ உள்ளே - Dhanush visit thirumala temple viral video here | Galatta

இந்திய ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இன்று தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களில் முக்கிய திரைப்படங்களில் நடித்து நாளுக்கு நாள் தனது ரசிகர் வட்டத்தை பெருக்கி கொண்டு வருகிறார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவான ‘வாத்தி’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. இப்படத்தையடுத்து தனுஷ் தமிழில் தனது 50 வது திரைப்படத்தை தானே இயக்கி நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு தர்காளிகாக ‘D50’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதையடுத்து இயக்குனர் செல்வராகவன் கூட்டணியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் ‘வடசென்னை 2’, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் புது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  அதை தொடர்ந்து இந்தியில் பிரபல திரைப்படமான ‘ராஞ்சனா’, ‘அத்ரங்கி ரே’ ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் ஆனந்த் எல் ராய் உடன் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் தனுஷ்.  ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது குறிப்பிடதக்கது.

இதனிடையே தனுஷ் தமிழில் நடித்து வரும் திரைப்படம். ‘கேப்டன் மில்லர்’. ராக்கி, சாணி காகிதம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் பக்கா ஆக்ஷன் காட்சிகளுடன் நிறைந்த படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க இவர்களுடன் சிவராஜ் குமார், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஸ், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் கேப்டன் மில்லர் மிக பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில்  தனுஷ் தனது குடும்பத்தாருடன் சேர்த்து திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். கடந்த சில மாதங்களாக நீண்ட முடியுடன் கேப்டன் மில்லர் படபிடிப்பில் பணியாற்றி வந்த தனுஷ் திருப்பதி கோவிலில் தன் மகன்களுடன் மொட்டை  அடித்து நேர்த்தி கடன் செலுத்தியுள்ளார். இது தொடர்பாக இணையத்தில் வெளியான வீடியோக்கள், புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலானது. கேப்டன் மில்லர் படத்தில் தனது பங்கை முடித்த பின்பே தனுஷ் இதை செய்துள்ளார் என்று ஒருபுறமும் ஒரு வேளை தனுஷ் நடித்து இயக்கவிருக்கும் ‘D50’ புது கெட்டப் என்றும் ரசிகர்கள் இணையத்தில் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.  

 

நெல்சன், அனிருத் ஆட்டம் ஆரம்பம்.. 1st Single அப்டேட்டை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாணியில் வெளியிட்ட ‘ஜெயிலர்’ படக்குழு – வைரல் பதிவு உள்ளே..
சினிமா

நெல்சன், அனிருத் ஆட்டம் ஆரம்பம்.. 1st Single அப்டேட்டை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாணியில் வெளியிட்ட ‘ஜெயிலர்’ படக்குழு – வைரல் பதிவு உள்ளே..

முனைவர் பட்டம் பெற்று கௌரவப்படுத்திய தாயார் மேகலா சித்ரவேல்.. பெருமையுடன் பார்த்து ரசித்த வெற்றிமாறன்..! – வைரலாகும் வீடியோ உள்ளே..
சினிமா

முனைவர் பட்டம் பெற்று கௌரவப்படுத்திய தாயார் மேகலா சித்ரவேல்.. பெருமையுடன் பார்த்து ரசித்த வெற்றிமாறன்..! – வைரலாகும் வீடியோ உள்ளே..

“உயிரோட்டமான இசை..” மாமன்னன் வெற்றியை இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுடன் கொண்டாடிய படக்குழுவினர்..
சினிமா

“உயிரோட்டமான இசை..” மாமன்னன் வெற்றியை இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுடன் கொண்டாடிய படக்குழுவினர்..