கோலாகலமாக நடைபெற்ற ராம் சரண், உபாசனா தம்பதியினர் குழந்தையின் பெயர் சூட்டும் விழா.. - இணையத்தில் வைரலாகும் அழகான பெயர்..!

ராம் சரண் குழந்தைக்கு வைத்த பெயர் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே - Ramcharan daughter name tweet goes viral | Galatta

தெலுங்கு திரையுலகில் ரசிகர்களின் மனம் கவர்ந்து துள்ளலான நாயகனாக வலம் வந்த  நடிகர் ராம் சரண் அவர்கள் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘மகதீரா’ திரைப்படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார். தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்த ராம் சரண் கடந்த ஆண்டு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். ஆர் ஆர் ஆர் திரைப்படம் உலகளவில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தனி வரவேற்பை பெற்று மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. அது மட்டுமல்லாமல் உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதக்  கூடிய ஆஸ்கர் விருதையும் ஆர் ஆர் ஆர் படம் தட்டி சென்றது. இதன் மூலம் ராம் சரண் உலகளவில் தற்போது குளோபல் ஸ்டாராக உயர்ந்துள்ளார். ஆர் ஆர் ஆர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் ‘கேம் செஞ்சர்’ படத்தில் தற்போது ராம் சரண் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ராம் சரண் -  உபாசனா தம்பதியினருக்கு அவருக்கு கடந்த ஜூன் 20 ல்  அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 2012 ல் அப்பல்லோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாவ் சி ரெட்டியின் பேத்தியான உபாசனா வுடன் நடிகர் ராம்சரணுக்கு திருமணம் நடைபெற்றது. தங்களது இருவரது துறையிலும் ஒரு தனி இடம் வகித்த பின்பே குழந்தை என்று முடிவில் இருந்த தம்பதியினருக்கு தற்போது பல ஆண்டுகளுக்கு பின்னர் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.   இந்த நிகழ்வு ராம்சரண் குடும்பத்தினர் உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். மேலும் திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வந்தது.

இந்நிலையில் ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா ஆகியோர் தங்களுடைய குட்டி தேவதைக்கு சூட்டியுள்ள பெயரை, அதிகாரப்பூர்வமாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளனர். நேற்று  ராம்சரண் - உபாசனா ஜோடி, தங்களின் குழந்தையின்  பெயர் வைக்கும் விழா கொலாகலமாக நடைபெற்றது. விழாவை நிறைவு செய்த பின்னர், குழந்தைக்கு ‘க்ளின் காரா கோனிடேலா’ என வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர்.  இது குறித்து புகைப்படங்களுடன் இணையத்தில் ராம் சரண் குடும்பத்தினர் பதிவிட்டனர்.

அந்த பதிவில் "‘க்ளின் காரா’ என்ற பெயர் லலிதா சகாஸ்ரணமத்திலிருந்து கொண்டு வரப்பட்ட பெயர். மாற்றத்தை உருவாக்கும் மற்றும் தூய்மை படுத்தும் ஆற்றலை கொண்டு வரும் ஆன்மீக விழிப்புணர்வை குறிக்கிறது . எங்கள் மகளின் தாத்தா பாட்டிகளுக்கு பெரிய அரவணைப்பு..” என்று குறிப்பிட்டு பெயர் காரணத்தையும் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அப்பதிவினை பகிர்ந்து அதனுடன் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  

 

KLIN KAARA KONIDELA ❤️

Taken from the Lalitha Sahasranamam the name signifies a transformative, purifying energy that brings about a spiritual awakening

A big big hug to our daughters grandparents 🤗🤗🤗🥰😍 pic.twitter.com/mIlTVDTGUA

— Upasana Konidela (@upasanakonidela) June 30, 2023

 

உலகளவில் பிரம்மாண்டமாக ரிலீஸாகும் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ -  அட்டகாசமான அறிவிப்புடன் வைரலாகும் வீடியோ..
சினிமா

உலகளவில் பிரம்மாண்டமாக ரிலீஸாகும் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ - அட்டகாசமான அறிவிப்புடன் வைரலாகும் வீடியோ..

“என் கருத்திற்கு வலிமை சேர்க்கும் மாமன்னன்..” படக்குழுவினரை வாழ்த்திய உலகநாயகன் கமல் ஹாசன்.!
சினிமா

“என் கருத்திற்கு வலிமை சேர்க்கும் மாமன்னன்..” படக்குழுவினரை வாழ்த்திய உலகநாயகன் கமல் ஹாசன்.!

மணிரத்னம், ராம் சரண், ஜூனியர் என்டிஆர்.. ஆஸ்கர் 2023 உறுப்பினர் குழுவில் இணைந்த இந்திய பிரபலங்களின் பட்டியல் உள்ளே..
சினிமா ஸ்பெஷல்ஸ்

மணிரத்னம், ராம் சரண், ஜூனியர் என்டிஆர்.. ஆஸ்கர் 2023 உறுப்பினர் குழுவில் இணைந்த இந்திய பிரபலங்களின் பட்டியல் உள்ளே..