ராகவா லாரன்ஸ் - SJசூர்யாவின் ஜிகர்தண்டா DOUBLEX படப்பிடிப்பில் கொண்டாட்டம்... அதிரடி அறிவிப்புடன் வந்த Shooting Spot GLIMPSE இதோ!

ராகவா லாரன்ஸ் - SJசூர்யாவின் ஜிகர்தண்டா DOUBLEX படப்பிடிப்பு நிறைவு,raghava lawrence sj suryah in jigarthanda doublex shoot wrapped | Galatta

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ.சூர்யா இணைந்த நடித்துள்ள ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்தவரும் கேம் சேஞ்சர் திரைப்படத்திற்காக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கதாசிரியராக பணியாற்றியுள்ளார். இதனிடையே தனது ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமான ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தை தற்போது கார்த்திக் சுப்பராஜ் உருவாக்கி வருகிறார்.

தனது முதல் படமான பீட்சா படத்தின் வெற்றிக்கு பின் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் இரண்டாவது படமாக வெளிவந்த ஜிகர்தண்டா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜிகர்தண்டா திரைப்படம் 8 ஆண்டுகளை நிறைவு செய்த தருணத்தில் ஜிகர்தண்டா 2 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டார். ராகவா லாரன்ஸ் மற்றும் SJ.சூர்யா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தின் அறிவுப்பு டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து பெரும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. 

முன்னதாக தனது ருத்ரன் திரைப்படத்திற்கு பிறகு சமீபத்தில் சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனின் கதை திரைக்கதையில் உருவாகும் அதிகாரம் படத்தில் நடிக்கிறார். அதேபோல் தனது பொம்மை திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கில் ராம்சரண் நடித்துவரும் கேம் சேஞ்சர் படத்திலும் தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்து வரும் SJ.சூர்யா அவர்கள் விரைவில் விஷால் நடிப்பில் வெளிவர இருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் தளபதி விஜயின் லியோ படத்திலும் SJ.சூர்யா ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் பரவுகின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளிவரவில்லை. இந்த வரிசையில் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ.சூர்யா இருவரும் இணைந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா DOUBLE X படத்தில் நடித்துள்ளனர்.

ஜிகர்தண்டா படத்தின் தயாரிப்பாளர் 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் அவர்கள் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்கள் ஆகியோர் இணைந்து தயாரிக்க அட்டகாசமான கேங்ஸ்டர் படமாக தயாராகி இருக்கும் ஜிகர்தண்டா DOUBLE X படத்திற்கு திரு என்கிற திருநாவுக்கரசு அவர்களின் ஒளிப்பதிவில், ஷபிக் முஹம்மத் அலி படத்தொகுப்பு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க விவேக் பாடல்களை எழுதி இருக்கிறார். திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. ஜிகர்தண்டா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து படப்பிடிப்பை நிறைவு செய்த கொண்டாட்டத்தின் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இதோ…
 

It's a WRAP for #JigarthandaDoubleX - see you in theatres this Diwali! #J2XShootWraps #DoubleXDiwali @offl_Lawrence @iam_SJSuryah @dop_tirru @Music_Santhosh@kaarthekeyens @stonebenchers @5starcreationss @alankar_pandian @onlynikil @thinkmusicindia pic.twitter.com/6LXUITIAJ1

— karthik subbaraj (@karthiksubbaraj) July 3, 2023

சிவகார்த்திகேயனின் பக்கா ஆக்ஷன் என்டர்டெய்னர் கேரண்டி… ரசிகர் ஆவலுடன் எதிர்ப்பார்த்த மாவீரன் பட அட்டகாசமான ட்ரெய்லர் இதோ!
சினிமா

சிவகார்த்திகேயனின் பக்கா ஆக்ஷன் என்டர்டெய்னர் கேரண்டி… ரசிகர் ஆவலுடன் எதிர்ப்பார்த்த மாவீரன் பட அட்டகாசமான ட்ரெய்லர் இதோ!

ஷாரூக் கானின் ஜவான் படத்தைத் தொடர்ந்து அட்லீயின் அடுத்த அதிரடி பாலிவுட் படம்... ரிலீஸ் தேதியுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

ஷாரூக் கானின் ஜவான் படத்தைத் தொடர்ந்து அட்லீயின் அடுத்த அதிரடி பாலிவுட் படம்... ரிலீஸ் தேதியுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

'நெல்சனை கலாய்க்கும் அனிருத்!'- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட முதல் பாடல் அறிவிப்பு ப்ரோமாவுக்கு ப்ரோமோ! கலக்கல் வீடியோ இதோ
சினிமா

'நெல்சனை கலாய்க்கும் அனிருத்!'- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட முதல் பாடல் அறிவிப்பு ப்ரோமாவுக்கு ப்ரோமோ! கலக்கல் வீடியோ இதோ