தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன்.சுகுமார் இயக்கத்தில் இவர் நடித்த புஷ்பா படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை அடுத்து அல்லு அர்ஜுன் அல்லு அர்ஜுன் 21,புஷ்பா 2 உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார்.இவர் நடிக்கும் 21ஆவது படத்தை மிர்ச்சி,பரத் அன்னே நேனு  உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய கொரட்டால சிவா இயக்குகிறார்.இந்த படம் 2022 தொடக்கத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புஷ்பா படத்தினை ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.ஃபஹத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முதல் பாகம் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் சூப்பர்ஹிட் ஓப்பனிங் பாடலின் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.அசத்தலான இந்த பாடல் வீடியோ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்