இடியட் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு !
By Sakthi Priyan | Galatta | December 24, 2020 18:12 PM IST

கடந்த 2011-ம் ஆண்டு வெளியான உயர்திரு 420 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அக்ஷரா கவுடா. அதைத் தொடர்ந்து துப்பாக்கி, ஆரம்பம், இரும்பு குதிரை, போகன் போன்ற படங்களில் நடித்தார். கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார் அக்ஷரா. ஆரம்பம் படத்தில் இடம்பெற்ற ஸ்டைலிஷ் தமிழச்சி என்ற பாடல் இவரை மேலும் பிரபலம் அடைய செய்தது. அதனால் ஸ்டைலிஷ் தமிழச்சி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.
அடிக்கடி தனது கிளாமர், பிகினி புகைப்படங்களை பகிரும் அக்ஷராவுக்கு சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள். லாக்டவுனுக்கு முன்பு, கார்த்திக் ராஜு இயக்கும் சூர்ப்பனகை படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் இடியட் படத்தில் அக்ஷரா கவுடா கொண்ட கேரக்டர் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சூனியக்காரியாக ஸ்டைலிஷ் தமிழச்சி என்று புகழாரம் சூட்டி ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
ஹாரர் காமெடி படமான இந்த படத்தை இயக்குனர் ராம்பாலா இயக்கி வருகிறார். மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். லொள்ளு சபா புகழ் இயக்குனரான ராம்பாலா கடைசியாக தில்லுக்கு துட்டு 2 படத்தை இயக்கியிருந்தார். ராம்பாலாவும், மிர்ச்சி சிவாவும் இணைந்தால் நிச்சயம் திரையரங்கம் மகிழ்ச்சி மழையில் நனையும் என்று கூறினால் மிகையாகாது.
ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இரண்டு மாதம் முன்பு வெளியானது. அதில் மிர்ச்சி சிவா மற்றும் நாயகி நிக்கி கல்ராணி பேயை கட்டையில் கட்டி தூக்கி கொண்டு செல்வது போல் இருந்தது. முதல் லுக்கே இப்படியா என்று கமெண்ட் செய்து ட்ரெண்ட் செய்தனர் திரை ரசிகர்கள்.
படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் ஷூட்டிங் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு காத்திருக்கும் படம் சுமோ. பிப்ரவரி 14, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹோசிமின் இப்படத்தை இயக்கியுள்ளார். ப்ரியா ஆனந்த் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Here it's a spl birthday wishes poster for @iAksharaGowda from the team #IDIOT #HBDAksharaGowda@BhalaRb @actorshiva @nikkigalrani @sidd_rao @nixyyyyyy @subbhunaarayan @Kirubakaran_AKR @onlynikil @RIAZtheboss @Screensceneoffl @CtcMediaboy pic.twitter.com/32D8IfgQpI
— Screen Scene (@Screensceneoffl) December 24, 2020
VJ Chithra's death enquiry completed by RDO, report to be submitted in two days
24/12/2020 04:16 PM
Rio denies groupism, Aari's strong comeback with proof | New Bigg Boss 4 promo
24/12/2020 03:00 PM