பழம்பெரும் சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் மறைவை அனுசரித்த தனுஷும் கேப்டன் மில்லர் படக்குழுவினரும் - புகைப்படங்கள் இதோ..

ஜூடோ ரத்தினம் மறைவை அனுசரித்த கேப்டன் மில்லர் படக்குழு -  Captain miller team pay last respect to stunt master judo rathinam | Galatta

தமிழ் சினிமாவில் தலைச்சிறந்த சண்டை வடிவமைப்பாளர் ஜூடோ ரத்தினம் உடல் நலக்குறைவு காரணமாக தனது 92 வது வயதில் மூப்பு காரணமாக காலமானார். அவர்களின் மறைவை திரையுலகமே அனுசரித்து வருகிறது. 60 களில் திரையில் அறிமுகமாகி பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு சண்டை காட்சிகள் வடிவமைத்து தன்னிகரற்ற ஒரு இடத்தை பிடித்தவர் ஜூடோ ரத்தினம். தற்போது சினிமாவின் மூத்த சண்டை வடிவமைப்பாளர்களான விக்ரம் தர்மா, சூப்பர் சுப்பராயன், தளபதி தினேஷ், ஜாகுவார் தங்கம், ராம்போ ராஜ்குமார், பொன்னம்பலம் ஆகியோர் ஜூடோ ரத்தினம் அவர்களின் உதவி ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட 1200 திரைப்படங்களுக்கு மேல் திரைப்படங்களில் பணியாற்றி  மக்களுக்கு ரசனையுடன் சண்டை காட்சிகளை கொடுத்த கலைஞர் இவரின் இழப்பை பல உச்ச நட்சத்திரங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். முதல்வர் மு க ஸ்டாலின் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.  

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கேப்டன் மில்லர்’ படபிடிப்பு தளத்தில் படக்குழுவினர் அனைவரும்  இறந்த பழம்பெரும் சண்டை வடிவமைப்பாளரான ஜூடோ ரத்தினம் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நடிகர்  தனுஷ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன், சண்டை வடிவமைப்பாளர் திலீப் சுப்ராயன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கு பெற்றனர்.

thalapathy vijay varisu movie director vamsi about memes and trollsமுழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகவுள்ள கேப்டன் மில்லர் படக்குழுவினர் அகஷனுக்கு புகழ்பெற்ற ஜூடோ ரத்தினத்திற்கு மரியாதை செலுத்திய புகைப்படங்களை கேப்டன் மில்லர் பட தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருத்தங்களை தெரிவித்தது. இதனையடுத்து அந்த புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்தும் தங்களது இரங்கல்களை தெரிவித்தும் வருகின்றனர்.

thalapathy vijay varisu movie director vamsi about memes and trolls

Our last respects to the legendary Stunt Master #JudoRathinam from team #CaptainMiller 🙏#RIPJudoRathnam @dhanushkraja @ArunMatheswaran @dhilipaction @NimmaShivanna @sundeepkishan @priyankaamohan @gvprakash pic.twitter.com/E20yxjxs5f

— Sathya Jyothi Films (@SathyaJyothi) January 27, 2023

மிகப்பெரிய பொருட்செலவில் 1930 சுதந்திர காலத்தில் நடக்கும் கதைக்களத்தில் தயாராகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யா ஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் மூன்று தோற்றங்களில் நடிக்கும் தனுஷ் உடன் இணைந்து சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர், குமரவேல், டேனியல் பாலாஜி, நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

அஜித், சூர்யாவிற்கு குரல் கொடுத்த பிரபல டப்பிங் கலைஞர் காலமானார்.. – அதிர்ச்சியில் திரையுலகம்.. நடிகர் சூர்யாவின் நெகிழ்ச்சி பதிவு..
சினிமா

அஜித், சூர்யாவிற்கு குரல் கொடுத்த பிரபல டப்பிங் கலைஞர் காலமானார்.. – அதிர்ச்சியில் திரையுலகம்.. நடிகர் சூர்யாவின் நெகிழ்ச்சி பதிவு..

சினிமா

"வம்சி சார் துணிவு பாத்தாச்சா..?" - ரசிகர் கேள்விக்கு பதிலளித்த வாரிசு பட இயக்குனர் வம்சி.. முழு வீடியோ இதோ..

யுவன் இசையில் வெளியானது எஸ் ஜே சூர்யாவின் ‘பொம்மை’ பட  பாடல்  – இணையத்தில் டிரெண்ட் ஆகி வரும் Exclusive Song இதோ..
சினிமா

யுவன் இசையில் வெளியானது எஸ் ஜே சூர்யாவின் ‘பொம்மை’ பட பாடல் – இணையத்தில் டிரெண்ட் ஆகி வரும் Exclusive Song இதோ..